பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

புறநானூறு - மூலமும் உரையும்



(உழிஞைத் திணைத் துறைகளுள் ஒன்றான, "அகத்தோன் வீழ்ந்த நொச்சிக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ. 11)

நீரறவு அறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை, மெல் இழை மகளிர் ஐதகல் அல்குல், தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, வெருவரு குருதியொடு மயங்கி, உருவுரந்து, 5 ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப், பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் மறப்புகல் மைந்தன் மலைந்த மாறே!

அழகிய நிறமுடைய நொச்சித் தழையை இளமகளிர் விரும்பித் தழையாடையாக்கி அணிதலை முன்னரே யாம் கண்டனம். இப்போது நொச்சிமாலை சூடிப் போர்க்கு வந்த இம் மறவனோ வாளால் வெட்டுப் பட்டு வீழ்ந்தனன். களத்திலே நிணந்தின்ன வந்த பருந்து, செந்நீரான் நனைத்த அந் நொச்சி மாலையினை, நிணம் என்றே கருதி உயரத் தூக்கிப் பறந்து செல்வதையும் இன்று கண்டனம். மறம் செறிந்த மறவன் அணிந்ததனாலன்றோ அதற்கும் அப் பெருமை ஏற்பட்டது!

சொற்பொருள்: செருவிடை வீழ்தல் - அகழியையும், காவற் காட்டையும் காத்து இறந்த வீரருடைய வெற்றியைச் சொல்லுதல் 6. ஒரு வாய்ப்பட்ட தெரியல் - துணிபட்டுக் கிடந்த நொச்சி மாலையை செத்து - கருதி 8. மறம்புகல் - மறத்தை விரும்பும்.

272. கிழமையும் நினதே!

பாடியவர்: மோசி சாத்தனார். திணை: நொச்சி. துறை: செருவிடை வீழ்தல்,

(அகத்தோன் வீழ்ந்த செயலைக் கூறுவது இது. சூடின. நொச்சியைப் புகழ்ந்தது இது என்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறத். சூ.13)

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த காதல் நன்மரம் நீ, நிழற் றிசினே! கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி, 5. காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின், ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.