பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

புறநானூறு - மூலமும் உரையும்


மகன் அவன். அவன் போர்செய்யும் ஆண்மையைக் காணுங்கள். குடம் நிறைய இருக்கும் பாலிலே, ஆய்மகள் தன் நகத்தால் தெறிக்கும் ஒரு துளி உறை மோர், அக் குடப்பால் முழுமையையும் கலக்கிக் கெடுக்குமாறு போலப், பகைவர் பெரும்படைக்கும் அவன் ஒருவனே, மேல்விழுந்து கலக்கம் விளைவிக்கும் நோயாகித் தோன்றுகின்றானே! அவன் தறுகண்மைதான் என்னே!

277. சிதரினும் பலவே!

பாடியவர்: பூங்கணுத்திரையார். திணை: தும்பை. துறை: உவகைக் கலுழ்ச்சி.

(தன் சிறுவன் பகைவரது களிற்றைக் கொன்று, அச்செறுவிடைத் தானும் மாய்ந்தனன் எனக் கேட்ட முதியோளான அவன் தாய் கொண்ட பெருமகிழ்ச்சியைக் கூறுகிறது செய்யுள். ஆனந்தக் கண்ணிர் உகுத்து நின்ற அந்தத் தாயின் நாட்டுப்பற்று ஒப்பற்றது! 'பேரிசை வாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம், மாய்ந்த பூசன் மயக்கம் என்னும் காஞ்சித் திணைத் துறைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல், புறத். சூ.19)

'மீன்உண் கொக்கின் தூவிஅன்ன வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணி நோன்கழை துயல்வரும் வெதிரத்து - 5

வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

மீனுண்ணும் கொக்கினது வெளிறிய இறகினைப்போல வெள்ளிய நரைத்த கூந்தலை உடையவள் இம் முதியோள். இவள் மகன் மிக்க இளையோனே! எனினும், போரிலே அவன் தன்மேல் எதிர்த்து வந்த களிற்றைக் கொன்று, தானும் அப் போரிலே புண்பட்டு இறந்தனன். அது கேட்டனள் அவள். அவனை ஈன்ற பொழுதினும் பெருமகிழ்வு கொண்டனள். அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பெருகின. வெதிர மலையிலே மூங்கிற் காட்டுள் மழைபெய்ய, அம் மூங்கில்களினின்றும் சொட்டும் துளிகளினும், அவள் சொரிந்த கண்ணிர்த் துளிகள் அவ்வேளை மிகுதியா யிருந்தன! -

278. பெரிது உவந்தனளே!

همر பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார். திணை: தும்பை. துறை: உவகைச் கலுழ்ச்சி.