பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

277


(தன் மகன் வீர மரணம் அடைந்தான் எனக் கண்ட தாயின் உவகையும், சோகமும் ஒருசேரக் காட்டும் சிறந்த செய்யுள் இது. அவனைப் படையழிந்து மாறினன்' எனக் கேட்டதும், அவள் கொண்ட கொதிப்பையும் காணலாம்)

'நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள். முளரி மருங்கின், முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன்" என்று பலர் கூற, "மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலைஅறுத் திடுவென், யான்" எனச் சினை.இக், 5 கொண்ட வாளொடு படுபிணம் பெயராச், செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணுஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

நரம்புகள் புடைத்துத் தோன்ற வற்றி உலர்ந்த தோள்களும்,

தாமரை இலைபோன்ற அடிவயிறும் உடைய முதிய தாய் ஒருத்தி, அவள் தன் சிறுவன் படையினை விட்டுப் போரிலே புறங் கொடுத்து ஓடினான்’ என்று அறியாதார் வந்து கூறக் கேட்டு மனக் கொதிப்படைந்தாள். "அவ்வாறு அவன் புறங்கொடுத்தானாயின், அவனுக்குப் பாலூட்டி வளர்த்த என் முலையையே அறுத்து எறிவேன்” என்று வஞ்சினங்கூறிப் போர்க்களஞ் சென்றாள். கையில் வாளும் கொண்டவளாகப் பிணக்குவியலைத் தேடினாள். அப்போது, ஒருபால், அச் செங்களத்திலே சிதைந்து வேறாகி வீழ்ந்து கிடந்த அவள் மகனின் உடலைக் கண்டாள். அப்போது அவள் கொண்ட மகிழ்வு, அவனை அவள் பெற்றபொழுது கொண்ட மகிழ்வினும் காட்டிற் பெரிதாயிருந்ததே!

279. செல்கென விடுமே!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(தன்னைப் பேணுதற்கு யாருமற்ற நிலையினும், தன் நாட்டைக் காப்பதற்குத் தன் சிறு மகனையும் களத்துக்கு அனுப்பி மகிழ்ந்தனள் ஒரு தமிழ்த் தாய். அவளுடைய வியத்தகு செயலின் விளக்கம் இச்செய்யுள்.வெட்சித்திணைத்துறைகளுள், மறங்கடை கூட்டிய குடிநிலை மகளிர் என்னும் துறைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல்.புறத். சூ. 4)

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே; மூதின் மகளிர் ஆதல் தகுமே,