பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

281


வெருட்டிச் சென்ற இவன் மார்பிலே படைக்கலன்கள் யாவும் தைத்தன. அதனால், கண்ணுக்குத் தோன்றும் உடலும், தோன்றா உயிரும் ஒருசேரச் சேர்ந்து கெட்டன. துண்டு துண்டாகச் சிதறிய அவனது கேடகந்தான் களத்திலே கிடக்கின்றது. அவனோ, திசையெங்கும் பரவும் நற்புகழை நிறுவிச், சொல்லாற்றல் மிக்க புலவர்களின் வாய்மொழியிலேயே நிலைத்து அமர்ந்து விட்டானே! - -

283. அழும்பிலன் அடங்கான்!

பாடியவர்: அடை நெடுங் கல்வியார் திணை: தும்பை. துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்).

(மாய்ந்த வள்ளலை நினைந்து பாணர் வருந்திப் பாடியது போல அமைந்த செய்யுள்)

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

வாளை நீர்நாய் நாள்இரை பெறுஉப்

பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி

மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்

அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், 5

வலம்புரி கோசர் அவைக்களத் தானும், மன்றுள் என்பது கெட.ானே பாங்கற்கு ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இவங்க, உயிர்ப்புறப் படாஅ அளவைத் தெறுவரத், தெற்றிப் பாவை திணிமணல் அயரும், 10

மெள்தோள் மகளிர் நன்று புரப்ப, е в 8 4 е - - - - е ф, ф e е че е e a - е е е ண்டபாசிலைக் கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே.

நீர் நாயானது குளத்திலே தன் நாளுணவு பெறச் சென்று வாளை மீனை நிறைய உண்டும் அமையாமல், வரால் மீனையும் பெறும் பொருட்டுத் தன்னினும் வலிய முதலையோடு போராடும் மறப்பண்புடைய 'அழும்பில்' என்னும் ஊர்க்கு உரியவன் அவன்! பெரும்போர் ஆற்றும் கோசருடைய அவைக்களத்தே எனினும், தனக்குவிதித்த நடுவிடம் என்பதும் கருதானாகத் தன் தோழனைக் காக்கும் பொருட்டு, அவன் மேலெறிந்த பகைவர் வேல்களை, இடம் பெயர்ந்து சென்று, தான், தன் மார்பில் ஏற்று நின்றான். அப்போது குடத்தில் ஆர்க்கால்கள் சூழப் புதைந்து தோன்றும் வண்டிச் சக்கரம் போல, அவன் பரந்த மார்பில் வேல்கள் பாய்ந்தன. உயிர் ஊசலாடும் அளவில், மகளிர் அவன் புண்களை ஆற்ற முயன்று காத்து நின்றனர். சிறிது தெளிவுபெற்ற அவன்,