பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

291


தோடுஉகைத்து எழுதரூஉத் துரந்துஎறி ஞாட்பின், வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி, இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, 5

சிறப்புடையாளன் மாண்புகண்டருளி, வாடுமுலை ஊறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.

(1. தோற்றிவைத்து - புறத்திரட்டு, 2. வாய்ப்படை - புறத்திரட்டு)

போர்க்களத்திலே கூரிய வேலைக் கையிலே பற்றியவனாகப், பகைவரின் முன்னணிப் படையைப் பிளந்து இடையறுத்துச் சென்று அதனை அழித்தான், ஆற்றல் சிறந்த ஒரு வீர மறவன். அவ் வேளை, இடைப்பட்ட அக் களத்திலே பகைவர் அவனையுந் தாக்கி, அவனுடலைச் சின்னாபின்னமாகச்சிதைத்தும் விட்டனர். அஞ்சி ஓடாத கொள்கையாளனான அம் மாவீரனுடைய தாய், தன்மகன் புண்பட்டுக் கிடந்த நிலையைக் கண்டாள். அவனுடைய வீரத்தைக் கண்டு மகிழ்ந்தது அத் தாயுள்ளம். வற்றிய முலைகளிலே பால் ஊறிச் சுரந்தது ('பெற்ற ஞான்றினும் பெரிது உவந்தனள் என்பது இது) . .

சொற்பொருள்: 1. கட்டுர் நாப்பண் - பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில். 2. வெந்து - மனம் புழுங்கி, பெரிய - பெயர்த்து.

296. நெடிது வந்தன்றால்!

பாடியவர்: வெள்ளை மாளர். திணை: வாகை. துறை: ஏறாண் முல்லை. . .

(போர்க்குச் சென்றவரான ஏனை மறவர்கள் தம் இடத்தை அடைந்தனர். ஒருவன் தேரின் வருகை மட்டும் தாமதித்து வந்தது. அதனைக் கண்ட அவன் தாய் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. ‘எல்லா மனையும் கல் என்றன என்பது, பலர் புண்பட்டுத் திரும்பிய செய்தியைக் கூறும்; அதனால், அவன் தாய் வருத்தமிகுதி அடைந்தனள் என்பதும் விளங்கும்)

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், எல்லா மனையும் கல்லென்றவ்வே" வெந்துஉடன்று எறிவான் கொல்லோ நெடிதுவந்தன்றால் நெடுந்தகை தேரே?