பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

19


கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், கொழுமீன், விளைந்த கள்ளின், - விழுநீர் வேலி நாடுகிழவோனே. 'மயிலினம் வயல்களிலே பீலிகளை உதிர்க்கும்; நெற்குட்டுடன் அவற்றையும் தொகுத்து வருவர் உழவர்.கொழுவிய, மீனும் விளைந்த கள்ளும் எங்கும் நிறைந்திருக்கும். அத்தகைய வளம் மிகுந்த சோணாட்டு மன்னன் இவன்! அம்பு தொளைத்த புள்ளிகளோடு, புலிநிறக் கவசமும் அணிந்து, கூற்றுவன் போலக் களிற்றின்மேல் இவர்ந்து வருகின்றான். அக் களிறுதான், கடலிடையே செல்லும் கலம் போலவும், விண்மீன் கூட்டத்திடையே விளங்கும் மதியம் போலவும், சுறாமீன் போல, கொடிய வாள்மறவர் மொய்த்துச் சூழப், பாகரையும் மதியாது மதம்பட்டுள்ளது. எவ்விதத் தீங்கும் இன்றி அவ்விடரினின்றும் விடுபட்டுச் செல்ல அவனை விடுவாயாக! (பகைவன் எனினும், அந் நிலையில் அவனைத் துன்பமின்றிச் செல்ல விடுமாறு, அறநெறியைக் கூறுகிறார் புலவர்)

சொற்பொருள்: 5.புலிநிறக் கவசம் - புலியினது தோலாற் செய்யப்பட்ட கவசம்.இதனை ‘மெய்புகுகருவி என்பர்.பூம்பொறி - பொலிவினையுடைய தோலினது இணைப்பு. 8. மரீஇயோர் - யானையைச் சூழ்ந்த பாகர். மைந்துபட்டன்று - மதம்பட்டது. சூட்டொடு - நெல்லரிக் கட்டோடு مر- --

14. மென்மையும் வன்மையும்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்: திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(தம் கையது மென்மைக்கான காரணத்தைக் கூறுவாரான புலவர், அரசன் கையது வலிய இயல்பின் காரணத்தைக் கூறியும் போற்றினர்; அதனால், இஃது இயன்மொழி ஆயிற்று. மெல்லிய வாமால் நும் கை எனக் கேட்ட சேரனுக்குக் கபிலர் கூறியதாக அமைந்த இச் செய்யுள், கபிலரது அறிவுத் திட்பத்தை நன்கு காட்டுவதுமாகும்) -

கடுங் கண்ண கொல் களிற்றால்

காப்புடைய எழு முருக்கிப்

பொன்இயல் புனை தோட்டியான்

முன்பு துரந்து, சமந்தாங்கவும்:

பார் உடைத்த குண்டு அகழி - 5

நீர் அழுவம் நிவப்புக் குறித்து,

நிமிர் பரிய மாதாங்கவும்;