பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

புறநானூறு - மூலமும் உரையும்



நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப், புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான் கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் இலங்குஇரும் பாசறை நடுங்கின்று: 'இரண்டா காது அவன் கூறியது. எனவே, 10

ஏவலனே! மகளிர் கோதை குடி, நின் குளிர் நடுக்கந்திர நாரரியான கள்ளை வார்க்க, அதனை உண்டு, காற்றினும் கடிது செல்லும் குதிரையைத் தயார் செய்வாயாக. "நேற்று என் தமையனைக் கொன்றவனை, அவன் தம்பியோடும் கொல்வதற் கான போரை நாளை யானே செய்யப் போகின்றேன்” என்று கூறியவனாக, உணவும் கொள்ளாது, பல குதிரைகளையும் நன்கு ஆராய்ந்து கொண்டிருக்கின்றான் ஒரு மாவீரன். அதனைக் கேட்ட பகையரசனும், அவன் பாசறையிலுள்ளாரும் 'அவன் சொன்னால் அது இரண்டாகாது’ என எண்ணி, மறுநாளை நினைத்து நடுநடுங்கியவராயினரே!

305. சொல்லோ சிலவே!

பாடியவர்: மதுரை வேளாசான். திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை. -

(பார்ப்பான் சந்து சொல்லிக் கொண்ட வெற்றிச் சிறப்பைச் செய்யுள் கூறுகின்றது. 'அந்தணன் துது சென்றதற்கு (தொல். அகத். சூ.28) இளம்பூரணரும், 'தூதருரை கேட்ட அகத்து உழிஞையோன் திறம் கண்டோர் கூறியதற்கு (தொல். புறத். 12) நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர்)

வயலைக் கொடியின் வாடிய மருங்கின், உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச், சொல்லிய சொல்லோ சிலவே, அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி, 5 மாண்வினை யானையும் மணிகளைந் தனவே. வயலைக்கொடி போன்ற வாடிய இடையும், வருத்தமுடன் நடந்து செல்லும் இயல்பும் உடைய ஊர்தியிலே, இரவு நேரத்தில் வந்தான் ஒரு பயலைப் பார்ப்பான். வந்தவன், இரவென்று கருதி வெளியேயும் நில்லாது, நேராக மன்னனின் அரண்மனையுட்

புகுந்து அவனையுங் கண்டான். கண்டவன், சொல்லிய சொற்கள் மிகமிகச் சிலவே. அதற்கே அப் பகை மன்னன் அஞ்சியவனாக,

மதிலைக் கொள்ளுதலுக்கு ஆயத்தம் செய்திருந்த ஏணி சீப்பு