பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

புறநானூறு - மூலமும் உரையும்


வேனல் வரிஅணில் வாலத்து அன்ன. கான ஊகின் கழன்றுகு முதுவீ 5

அரியல் வான்குழல் சுளியல் தங்க,

நீரும் புல்லும் ஈயாது உமணர் * யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர் பேருயிர் கொள்ளும் மாதோ, அதுகண்டு 10

வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்து எஞ்சலிற் சிறந்தது பிறிதொன்று இல் எனப், பண்கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே! குன்று அனைய களிற்றோடு பொருது வீழ்ந்து கிடக்கின் றானே அவன் யார்? யாரோ அயலான்போலத் தோன்றுகிறானே! அதோ பார்; புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்டுச் சென்ற முடம்பட்ட எருமைக்கிடா, தன் அருகே பட்ட அனைத்தையும் தின்று தீர்க்குமாறுபோல, அசையாது, நின்று, வரும்பகைவரை எல்லாம் தீர்த்துக் கட்டுகின்றானே ஒருவன்! அவன் ஆற்றலைக் கண்டு அஞ்சிய பகை வேந்தனும், வெற்றிபெற்றுப் புலவர் பாடும் புகழ் பெறத் தன்னால் இயலாது எனக் கருதித் தன் நெஞ்சுறுதி நீங்கத்தானும், அவன் வேலால் பட்டு வீழ்கின்றானே! அவ்வாறு போர் செய்யுந் தகுதியுடையோன் தான் என் கணவன்! அதனை நீயும் அறிவாயாக, தோழி!

308.நாணின் மடப்பிடி!

பாடியவர்: கோவூர் கிழார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

('பகை வேந்தனது யானையின் முகத்திலே தன் கைவேலை எறிந்தான்; பகையரசன் எறிந்த வேல் இவன் மார்பைத் தாக்கிற்று: அதைப் பறித்து அவன் உறுத்துநோக்கப் பகைவரின் களிறுகள் எல்லாம் புறமுதுகிட்டவாய் ஓடின என்று கூறுகின்றது செய்யுள் தன் தலைவன் பட்டு வீழ்ந்ததையும் மறந்து, அவனது மற மேம்பாட்டை இப்படிப் போற்றுகிறாள் ஒரு பெண். 'ஆரமர் ஒட்டல்' என்னும் துறைக்கு நச்சினார்க்கினியர் (தொல் புறத். சூ.5) எடுத்துக் காட்டுவர்)

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

மின்நேர் பச்சை, மிஞற்றுக்கு சிறியாழ்

நன்மை நிறைந்த நயவிரு பாண!

சீறுர் மன்னன் சிறியிலை எஃகம்

வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே: 5