பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

303


தாதுஎரு மறுகின் மாசுண இருந்து, பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை மாதோ, செருவத்துச் 5 சிறப்புடைச் செங்கண் புகைய வோர் தோல்கொண்டு மறைக்கும் சால்புடையோனே.

உவர்நிலத்திலே கிணறு தோண்டித், தினமும் புலைத்தி துவைத்துத் தருகின்ற தூய வெள்ளாடையை அணிந்து செல்வானேனும், பூந்தாது படிந்த மன்றத்திலே, அவ்வாடைகளும் அழுக்குப்படிய, அதனைக் கருதாதும் இருந்து, பலரது குறையையும் கேட்டு வேண்டியன செய்து உதவுபவனான, மலர்மாலையணிந்த அண்ணல் எம் தலைவன்! அவன், போர்க்கு எழுந்து செல்லுங் காலத்திலேயோ, துணையாக ஒருவரும் இல்லையாகவும், அருட்சிறப்புடைய கண்கள் சினத்தால் அழல் எழக், கேடயங் கொண்டு, பகைவர் படைகளினின்றும் தானே தன்னைக் காத்துக் கொள்ளும் பேராற்றல் மிக்க பெருந்தகையாளனும் அவனே காண்!

312. காளைக்குக் கடனே!

ut4uല് பொன்முடியார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(கடமை உணர்வோடு வாழ்ந்தவர் பழந்தமிழ்க் குடியினர் ஆவர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய கடமைகளைப் பற்றிய விளக்கமாகச் செய்யுள் அமைகின்றது. ஒரு மறக்குடித் தாயின் மனநிலை விளக்கமாகவும் அமைந்துள்ளது.)

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கட்னே, வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே, நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், 5 களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

(1. தண் நடை - புறத்திரட்டு, 2. வெஞ்சமம் - புறத்திரட்டு)

என் முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமையோ சான்றோனாக ஆக்குதல். வேல் வடித்துத் தருதல் கொல்லனின் கடமை. நல்ல முறையிலே அவனுக்குப் போர்ப்பயிற்சி முதலியவை அளித்தல் வேந்தனின் கடமை. இவ்வளவு கடமைகளையும் பிறர் செய்ய, ஒளிர்கின்ற வாளினைப் போர்க்களத்திலே சுழற்றிக் கொண்டே, போரிலே