பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

புறநானூறு - மூலமும் உரையும்


316. சீறியாழ் பனையம்!

பாடியவர்: மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

f (மறக்குடி தலைவன் ஒருவனது கொடையாண்மையையும்,

படையாண்மையையும் போற்றிக் கூறுகின்றது செய்யுள். மறவன்

ஆரமர் ஒட்டல் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர் (தொல், புறத்.

சூ.5) -

கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக், காட்டொடு மிடைந்த சீயா முன்றில், நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே! அவன்எம் இறைவன், யாம்அவன் பாணர், நெடுநநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் 5 இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவது இலாளன் என்னாது, நீயும் வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக், கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், 10 சென்றுவாய் சிவந்துமேல் வருக - சிறுகண் யானை வேந்து விழுமுறவே.

யானைமீது வந்த பகையரசனை வென்று வாகை சூடிக், கள்ளினை வாழ்த்தித், தன் வீரருடன் உண்டு மகிழ்ந்து, விடியற் காலத்து வரையும் மதுவருந்திய மயக்கத்தால் முற்றத்திலே துங்குகின்றானே, அவனேதான் எம் தலைவன்! யாம் அவன் பாணர்! நேற்று, வந்த விருந்தினர்க்கு ஏதும் இல்லையாகத் தன் பழைய புகழுடைய வாள்மீது கைவைத்தனன். இன்றோ, வெற்றி மயக்கத்தால் உறங்குகின்றனன். தருவானோ மாட்டானோ என்னாது நீயும் நின் விறலியும் அவன்பால் விரைந்து செல்வீராக. கள்ளுடைய கலத்தை ஏந்தும் நாம் மகிழ்வுற, அவன் விறலியர்க்கு அணியும், நமக்குக் கள்ளுடன் சோறும் தருவான்.செல்க நும் வாய் சிவந்து வருக! ஐயம் ஏனோ? எம் யாழ் பணையம்!

317. யாதுண்டாயினும் கொடுமின்!

பாடியவர்: வேம்பற்றுார்க் குமரனார். திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை. *~

(துயில்கின்றான் ஒருவனுக்கு, 'அவன் யாது கேட்பினும் கொடுங்கள்’ என்று உரைப்பதன் மூலம், அவனுடைய வல்லாண்மையைச் சிறப்பிக்கின்றது செய்யுள். அவன் விழித்தால்