பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

புறநானூறு - மூலமும் உரையும்


ஆவம் சேர்ந்த புறத்தை, தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! 10 வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை. புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகை கொளிஇ ஊன்துவை கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் 15 மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு இருநிலத்து அன்ன நோன்மை செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே!

“யானைப் போரிலே யானையை முன்னர் ஏவிப் பின்னர் இழுத்துப் பிடிக்கின்றாய். படுகுழிகளைத் தாவிச்செல்லும் குதிரைகளை அவற்றின் வாரினைப் பற்றி அடக்கிச் செலுத்துகின்றாய். தேர்மீது நின்று வலிய வில்லிலே நாண்பூட்டி அம்பினைக் கடுகச் செலுத்துகின்றாய். பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகளை வாரி வாரி வழங்கவும் செய்கின்றாய். இவ்வாறு செய்வனவெல்லாம் நின் கைகளே அன்றோ! பெருமானே! பெண்டிர்க்கு ஆற்றுதற்கு அரியதும், பொருதுவார்க்குத் துளக்கப்படாத வலிமை உடையதுமான மார்பனே! போரில் மிகுந்த ஆற்றல் காட்டுபவனே! நின் கைகள் அதனால் உரம் பெற்றிருப்பது இயல்பே நின்னைப் பாடும் யாமோ, ஊனும் கறியும், துவையும் சோறும் எடுத்து உண்பதைத் தவிர, எம் கைகளால் வேறெதும் செய்தறியோம்! அதனாலேயே, எம் போல்வார் கைகள் மிக மென்மையாக உள்ளன. (சேரமானின் கைகள் மென்மையாயிராதது ஏன் எனக் கூறி, அவனையும் அதுவே பொருளாகப் புகழ்ந்துரைக்கிறார் புலவர்)

சொற்பொருள்: 2 எழு கணையமரம். 3. பொன் இரும்பு. தோட்டி - அங்குசம், 5. குண்டு அகழி- குழிந்த அகழி ஆழமுடைய அகழி எனும் ஆம். 6. நீர் அழுவம் - நீர்ப்பரப்பு நிவப்பு - உயர்ச்சி. 7. நிமிர்பரிய துகைத்த செலவினையுடைய. 8. ஆவம் - அம்பறாத்துணி, புறத்தை முதுகை உடையாய்.9. சாபம் - வில் 12. பைந்தடி - செவ்விய தசை. 15. நன்றும் - பெரிதும். 16. நல்லவர் - பெண்கள். 17. ஆரணங்கு ஆகிய மார்பு - ஆற்றுதற்கு அரிய, காண்பார் அதன் பேரழகால் வருந்துமாறு செய்யும் மார்பு. 18. இரு நிலத்து அன்ன நோன்மை - துளக்கப்படாமையின், பெரிய

நிலம் போன்ற வலிமை, -