பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

311


வெருட்டியது. அதற்கஞ்சிய எலி வரகின் தோகையிலே சென்று ஒளித்தது.அத்தகைய புன்செய் வளமிக்கது,போரிட்டுப்போரிட்டு வடுபட்ட வாளோடு விளங்கும் வெற்றி வீரனான சென்னி என்னும் போர்வெம்மை கொண்ட தலைவன் காத்து அளிக்கும் ஊர். பாணனே! அங்குச் சென்றால், நீயும் நின் துயர் தீர்ந்து பயன் பெறலாம்.

322. கண்படை ஈயான்!

பாடியவர்: ஆவூர்கிழார் திணை: வாகை. துறை: வல்லாண் முல்லை.

(வேந்தர்க்குக் கண்படை ஈயா வேலோன் எனத் தலைவனது ஆண்மையைச் சிறப்பிக்கின்றார். 'கரும்பின் எந்திரஞ்சிலைப்பின் என்று, கரும்பு ஆலை பற்றிய செய்தியையும் இச் செய்யுளால் அறிகின்றோம்.) -

உழுதுர் காளை ஊழ்கோடு அன்ன கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப் புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும் புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின், பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5 மன்றிற் பாயும் வன்புலத் ததுவே: கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது, இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண், தண்பனை யாழும் வேந்தர்க்குக் கண்படை ஈயா வேலோன் ஊரே! 10

உழவு காளையின் கொம்பினைப் போன்ற கவறுபட்ட முள்ளுடைய வள்ளியின் பொரிந்த அடிப்பாகத்தில் இருந்து கொண்டே, விளைந்த புதுவரகினை அரியும் வயல் எலியினைப் பிடிக்கக் கருதி எதிர்பார்க்கும் சிறுவர், அதுகண்ட மகிழ்வினாால், வில்லினை எடுத்து ஒலிப்பர். அவ்வொலி கேட்டு, வேலிப் புறத்திலே வாழும் குறுமுயல்கள், கருமையான புறத்தினையுடைய மட்கலங்கள் உடையுமாறு மன்றிலே பாய்ந்து ஒடும். அத்தகைய வன்புலத்தின் கண்ணே உள்ளது அவன் ஊர். கரும்பினைப் பிழியும் எந்திரம் ஒலி செய்ய, அவ்வொலி கேட்டு, அதன் அயலேயுள்ள நீர்நிலைகளிலே வாளைமீன்கள் பிறழும், குளிர்ந்த

மருதநிலத்து ஊர்களை ஆளும் வேந்தர்க்குக் கண்ணுறக்கம்

கொள்ளாது கவலைமிகும் அச்சத்தைத் தரும் வேல் வீரனின் ஊர் அது. (சிறுவர் வில்லொலிக்கு முயல்கள் நடுங்குவதுபோல, அவனுக்குப் பகைவர் நடுங்கிக் கண்ணுறங்காதாராவர் என்பது

கருத்து)