பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

புறநானூறு - மூலமும் உரையும்


வரையாது வழங்குதற்கேற்ற செல்வவளம் அவனிடம் மிகுந்தால், காவல் மன்னர் கடைமுகத்திலே கொட்டும் வெண்சோற்றுப் பலியினைப் போல, வருபவர் யாவர்க்கும் வரையாது தூவவும் வல்லவன் ஆவான்.

சொற்பொருள்: 1. கல் அறுத்து இயற்றிய - செங்கற்களை ஒழுங்காக அறுத்துக் கட்டிய வல்லுவர்க் கூவல் வலிய உவர்நீர் ஊறும் கிணறுகள். 2. வில்ஏர் வாழ்க்கை சீறுர் மதவலி - வில்லைக் கொண்டு வேட்டமாடி வாழும் வாழ்க்கையையுடைய சீறுார்க்கு உரியவனாகிய மிக்க வலிமையுடைய தலைவன்.

332. வேல் பெருந்தகை உடைத்தே!

பாடியவர்: விரியூர் நக்கனார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(வல்லான் மறவன் ஒருவனது குரம்பைக் கூரையுட் கிடக்கும் வேலினைச் சுட்டி, அதன் சிறப்பை வியந்து கூறுவதுபோல, அவன் மேம்பாட்டை உரைக்கின்றனர். பாடாண் திணைத் துறைகளுள் ஒன்றான, மாணார்ச் சுட்டிய வாள் மங்கலத்திற்கு இளம்பூரணரும் (தொல், புறத். சூ.30) உழிஞைத் திணைத் துறைகளில் ஒன்றான, வென்ற வாளின் மண்ணல் என்பதற்கு நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டுவர். (தொல் புறத் சூ.13) பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்து இடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும், மங்கல மகளிரொடு மாலை சூட்டி, 5 இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத், தெண்ணிப் படுவினும் தெருவினும் திரிந்து, மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும், ஆங்கு, இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 10 இவ்வூர்த் தலைவனாகிய மறவனின் கைவேல் பிற வீரர்களின் வேல் போல்வதன்று. இலைப்புறம் புழுதிபடிந்து குடிலின் இறைப்பாலே செருகப்பட்டுக் கிடந்தாலும் கிடக்கும்; இன்றேல், தெளிந்த நீர்மடுவில் நீராட்டப்பெற்று, மாலை சூட்டப்பெற்று, மங்கல மகளிர் வாழ்த்த, யாழோடு பல்லிசை முழங்க, ஊர்வலம் வந்து, பகைவர் நாடு நடுங்கப் போர் முனைக்குச் சென்றாலும் செல்லும். அங்கும், கடல் போன்ற பெரும்படை வேந்தர் ஊர்ந்துவரும் பட்டத்துக் களிற்றியானையின் முகத்திலே