பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

புறநானூறு - மூலமும் உரையும்


தருவாளேயன்றி, எம் தலைவனின் இல்லாள் இல்லையென்று கூறி நூம்மைப் பசியோடும் செல்ல விடாள். வேட்டுவக் குடியினர் அனைவருமே இவ்வாறு உதவுபவர்தாம். உடும்புத் தோலாற் செய்த கைச்சரடு கொண்ட தேர்வீரர் சூழ்ந்துவரக் கச்சணிந்த யானையூர்ந்து வரும் வேந்தனே தன்பால் வந்தாலும், அவனுக்கும் அதனையே உண்பிப்பவர் அவர். அவன் முயற்சியால் பெற்ற செல்வமெல்லாம் பரிசிலர்க்கு வழங்குவதற்கே யாகும். (புறநானூற்று 157 ஆவது பாடலுடன் காணும்போது, இதுவும் ஏறைக்கோனைக் குறமக்ள் இளவெயினி பாடியதாகக் கருதுவர்)

334. தூவாள் தூவான்!

பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(மறக்குடி ஒன்றின் தலைவனது மறமாண்பைப் போலவே, அவன் மனைவியது இரவலரோம்பும் இல்லற மாண்பும் சிறப்புற்றிருந்த நிலையைக் கூறுகின்றது செய்யுள்)

காமரு பழனக் கண்பின் அன்ன

தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,

புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,

படைப்பு ஒடுங்கும்மே...பின்பு.

●始始 出疹 够 够 ●●●● னுரேமனையோள்

பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஒம்பவும்,

ஊணொலி அரவமொடு கைது வாளே,

உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த

பொலம்.ப்

பரிசில் பரிசிலர்க்கு ஈய, 10

உரவேற் காளையும் கைது வானே.

சண்பங்கோரையின் கதிர்போலும் மயிரடங்கிய குட்டையான கால்களையுடைய குறுமுயல்கள், மன்றிலே விளையாடும் சிறுவரின் விளையாட்டு ஒலியைக் கேட்டு அஞ்சி, வைக்கோற் போரிலே சென்று பதுங்கும். அவ்வூர்த் தலைவன் மனைவியோ, பாணர்க்கும் பரிசிலர்க்கும் ஓயாது உணவு அளிக்க, அவர் உண்ணும் ஒலியொடு தானும் கை ஓயாதவளாயினாள். உயர்ந்த கோட்டினையுடைய, புள்ளி முகத்துப் பகைவரது களிற்று யானையின் பொற்பட்டங்களைப், பரிசிலர்க்கு வழங்கி வழங்கி, அவள் கணவனான காளையும் கை ஓயாதவனாயினான்.