பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

புறநானூறு - மூலமும் உரையும்



பெண்ணின் தாயை நொந்து கொள்வது போலக் கூறிய செய்யுள் இது. 'தகை வளர்த்து எடுத்த நகையொடு, பகை வளர்த்திருந்த பண்பில் தாய்’ என்கிறார் புலவர். அவர்களது இடையே சந்து செய்து மணத்தை முடித்தாளில்லையே என்பது கருத்து)

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே, கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்; ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா, சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே, 5

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க, அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர், அறன்இலள் மன்ற தானே - விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவணப்பு ஏந்திய முற்றா இளமுலைத் 10

தகைவளர்த்து எடுத்த நகையொடு, பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

வந்து கேட்டானே வேந்தன், அவனும் வெஞ்சினத்தினன். இவள் தந்தையோ காலாகாலத்தில் செய்யவேண்டுவதைச் செய்யாது செயல்மறந்து சினந்தான். களிறுகள் கடிமரத்திலே அமையாது சீறி நின்றன. மறவரும் சினந்து இதழ் மடித்தனர். இவ்வாறு, இவள் தந்தையும் இவளை கேட்டுவந்த அவனும் போர்க்கு எழுந்தனர். பல்லியம் முழங்கும் அப் பழநகரிலே ஒரே கலக்கம் நிறைந்தது. தன் மகளை வளர்த்துப் பருவமாக்கியதுடன், கூடவே பகையையும் வளர்த்த தாயானவள், பண்பும் அறனும் இல்லாதவளாவள். (பெண்ணின் பேரழகே இத் துணைக்குங் காரணமாயிற்று, என்றது இது)

மகட்பாற் காஞ்சியாவது, நின்மகளைத் தருக என்னும் அரசனோடு மாறுபட்டு நிற்றல், கலம்பகங்களில் இத்துறை"மறம்" என்னும் உறுப்பாய் அமைத்துக் கூறப்படுகின்றது.

337. இவர் மறனும் இற்று! பாடியவர்: கபிலர். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

("நின் மகளைத் தருக என்னும் மன்னனோடு மாறுபட்டு எதிர்த்து நிற்றலைக் கூறுவது இத் துறை. யாராகுவர்கொல் இவளை மணப்பவர் எனக் கூறி இரங்குகின்றனர் புலவர். மணம் பேசி வந்தார் அனைவரையும் மறுத்துப் போக்கிய தலைவனது மேம்பாட்டையும் கூறுகின்றார். கபில நெடுநகர் என வருவது (1) கபிலரது ஊர் போலும் இது சிந்தனைக்கு உரியது)