பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

புலியூர்க்கேசிகன் 327

ஊர்வளமும் மறமும் மகட்கும் உடையதாகச் சொல்லப்பட்டது. மூவேந்தர்க்கே தாரானாயின் நீ எம்மட்டோ? என்றது இது)

339. வளர வேண்டும் அவளே!

பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(முறஞ்செவி யானை வேந்தர், மறங் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளாகிய ஒரு கன்னியைப் பலரும் மணம் பேசி வந்து திரும்பிய நிலையைக் குறித்துப் பாடிய செய்யுள் இது)

வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர், வீததை முல்லைப் பூப்பறிக் குந்து, குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து, 5 தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தற் பூக் குறுகஉந்து, - பைந்தழை துயல்வருஞ் செறுவிறற் S CS S S S S S S S S S S S S S S S S S S S Sலத்தி 1 O வளர வேண்டும், அவளே, என்றும் - ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி, முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

ஆனேறுகள் புல்மேய்ந்து மரநிழல்களிலே தங்கி அசையிட்டவாறு நின்றன. கோவலர் முல்லைப் பூவைப் பறிக்க எறிந்த குறுங்கோல் கண்டு அஞ்சிய குறுமுயல், கழனிகளில் உகளும் வாளை மீன்களோடு சேர்ந்து துள்ளித் தாவிச் சென்றன. அவ் வூரவளான மேகலையும் தொடியும் அணிந்த ஒர் இளமகள், கடல் நீராடி, கானற் சோலையின் கயத்திலே பாய்ந்து, கழுநீர்ப் பூக்களையும் பறித்துக் கொண்டு பசிய தழையாடையும் சுற்றியவளாக, வயலைப் போலச் செழுமையுடன் வருகின்றாள்.

அவள் என்றும் வளரவேண்டும். ஆனால், அவளோ, தனக்காகப்

போர் நடப்பதை விரும்புவாளாயினளே! யானைகளையுடைய வேந்தரின் போர்மறம் நிரம்பிய நெஞ்சைத் தன்னுள்ளே கொண்டு, பெண்போலக் காட்டி ஒளித்துக் கொண்டுமிருக்கின்றாளே!