பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

புறநானூறு - மூலமும் உரையும்



'கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள், ஏனோர் மகள் கொல் இவள்?' என விதுப்புற்று, என்னோடு வினவும் வென்வேல் நெடுந்தகை; திருநயத் தக்க பண்பின் இவள் நலனே 5

பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண்டதற்பின், ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறுஉம், 1 O

தண்பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅ மையின் பேரமர் செய்தலின், கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும்

மாட்சி யவர், இவள் தன்னை மாரே. 15

'அண்டங் காக்கைச் சிறகுபோன்ற கரிய விழியுடையாள்; பெருந்தோளினளான இளையவள், இவள் யார் மகளோ? என, அவள் மேல் ஆசையுற்று என்னிடம் கேட்கின்றாய் நெடுவேலை உடையவனே கேள்; திருமகளும் விரும்பும் பண்பு நிறைந்த இவள் நலன், படை மறவர்க்கல்லது பிறர்க்குக் கிடைப்பதன்று. மருதநிலத் தலைவனான இவள் தந்தையும், மகள் மறுத்தலாற் சினந்த வேந்தரும் நடத்திய போர்களோபல.இவளைப் போரிலே வென்று பெறுவதும் எளிதன்று. நெற்போர் போலக் கொன்று குவித்த பகைவர் சடலங்களைப், போர்மிதிக்கும் எருதுகள் போலக் களிறுகள் துவைத்துச் செல்ல, வாள்கொண்டு நாளும் வாளுழவு செய்யும் மாட்சியுடையவர் இவள் தமையன்மார். எனவே, ஆசையை விட்டு அகன்று செல்வாயாக!

343. ஏணி வருந்தின்று!

பாடியவர்: பரணர் திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(அழகிய இளங்கன்னி ஒருத்தியை வேட்டு வந்தோர் பலர். அவர் கொண்டு குவித்த பரிசுப் பொருட்கள் அளவில. ஆயினும், ‘இனி இவ்வூர்தான் வரும் போரால் வருந்தும் போலும் என இரங்குவது செய்யுள்)

'மீன் நொடுத்து நெல் குவைஇ

மிசை யம்பியின் மனைமறுக் குந்து!

மனைக் கவைஇய கறிமூ டையால்