பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

331


கலிச் சும்மைய கரைகலக் குந்து - கலந் தந்த பொற் பரிசம் 5 கழித் தோணியான் கரைசேர்க் குந்து, மலைத் தாரமும் கடல் தாரமும்

தலைப் பெய்து வருநர்க்கு ஈயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, 10 நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும், 'புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத் தந்தையும் கொடாஅன் ஆயின் - வந்தோர், வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே - பருந்துஉயிர்த்து 15 இடைமதில் சேக்கும் புரிசைப் படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?

'குட்டுவனின் முசிறி நகரத்தை யொத்த பெருஞ் செல்வத்தைப் பணிந்துவந்து கொடுப்பினும், ஒருக்காலும் உயர்ந்தோர் அல்லாதவரை மணந்து கொள்ளாள் எனச் சொல்லி, அவள் தந்தை, அவர்க்குத் தர இசையான் ஆயினான். பெண் கேட்டு வந்தவரோ, அதுகேட்டுப் பொறாது சினந்து, அரணை வெல்லும் பொருட்டுக் சார்த்திய ஏணிகளுடன் முற்றுகை யிட்டுள்ளனர். இவ்வூர் மதிற்காவலரும் படையேந்தி வீரமுடன் திகழ்கின்றனர். இந் நகர்க்கும், இருபுறத்து வேந்தர்க்கும் நேரும் இடையூறு கருதியோ, மதிற்புறத்திற் சார்த்திய ஏணியும் அதோ வருந்திச் சாய்கின்றது?

344. இரண்டினுள் ஒன்று!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார். பாடப்பட்டோன்: பெயர்

தெரிந்திலது. திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி. (திணை, வாகையும்; துறை: மூதின் முல்லையும் கூறப்படும்)

(பரிசப் பொருளைப் பெற்று இவளை மணவேள்வியில் தருவதனால் இவ்வூர் வளம் பெறுமோ? அல்லது இவள் தந்தை மறுத்தலால், இனிப் போர்க்கள மாகித்தான் தொல்லையுறுமோ? என்று கூறி வருந்துகிறார் புலவர்) -

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர் ஒப்பலின், பறந்தெழுந்து, துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு, நிறைகால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ, புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, 5