பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

புறநானூறு - மூலமும் உரையும்


349. ஊர்க்கு அணங்காயினள்!

பாடியவர்: மதுரை மருதனிள நாகனார். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(அவள், தான் பிறந்த ஊர்க்கே அணங்காயினள் என வருந்துகின்றார் புலவர். 'கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய அல்லது பணிந்து மொழியலனே' என்றும் நொந்தும் கொள்ளு கின்றார். பாரியது பறம்பு முற்றுகையை இச் செய்யுள் நினைவு படுத்துகின்றது. 'பெருஞ்சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்தது இது என்பர், ஆசிரியர் இளம்பூரணர் (தோல், புறத். சூ.19)

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும் வேந்தே, தந்தையும், நெடிய அல்லது பணிந்துமொழியலனே; இஃதுஇவர் படிவம் ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, 5

மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.

வேல்முனை கொண்டு நெற்றி வியர்வையைத் துடைத்த வாறே வேந்தனும் கடுமையான வார்த்தைகளைக் கூறி நின்றான். இவள் தந்தையும் பேச்சை இழுத்துக்கொண்டே போனானேயன்றி, அவன் விருப்பத்திற்கு இணங்கிப் பேசாதவன் ஆயினான். இதுவே, இவ்விருவரும் மேற்கொள்ளும் நிலையானால், கூரிய பற்களும், அரிபரந்து மதர்த்து குளிர்ந்த கண்களும், மாமை நிறமும் உடைய இவள், இவ்வூர்க்குக் கேடுதரப் பிறந்தவளே யாவள். காட்டுப் பெருமரத்திலே பட்ட சிறுதி அக் காட்டையே அழிப்பதுபோல, இவளே இவ்வூரை அழிக்கும் அணங்காயினளே!

350. வாயிற் கொட்குவர் மாதோ!

பாடியவர்: மதுரை ஒலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(தலைவன் ஒருவன், தன் மகளை வேந்தர்குடி இளைஞனுக்குத் தர மறுத்தனன். அடுத்து அவர் படையோடு வந்து முற்றுவர்; போருக் வந்தெய்தும் என்பனவற்றை நினைத்துப் புலவர் நொந்தவராகம் கூறிய செய்யுள் இது. வடிவேல் எஃகிற் சிவந்த உண்கண்' என்னும் உவமை நயத்தை உணர்ந்து இன்புறுக. பகைவரை எறிதலால் குருதிக் கறை படிந்த வேல் அதுவென அவர்தம் மறமேம்பாட்டையும் இது உணர்த்தும்)