பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

337


தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர் யாங்கா வதுகொல் தானே, தாங்காது படுமழை உருமின் இறங்கு முரசின் கடுமான் வேந்தர் காலை வந்து, எம் - 5

நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ, பொருதாது அமருவர் அல்லர், போர் உழந்து அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், - தொடிபிறழ் முன்கை, இளையோள் 10

அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே. (. அமைகுவர் - வேறு பாடம்)

அடுபோரிலே முன்னணியில் நிற்பவரான இவள் தமையன்மார், தம் கையில் ஏந்திய வடித்த வேலின் இலை போன்று, நீண்ட சிவந்த மையுண்ட கண்களும், தொடியணிந்த முன்கையும் உடையவள் இக் கன்னி. இவளது மார்பிலே சுணங்குகள் அரும்பின; மணப்பருவமும் வந்துவிட்டது. இடி முழங்கும் முரசமும், விரைந்து செல்லுங் குதிரையும் உடைய வேந்தர்கள், நாளைக் காலையே வந்து எமது நெடுநிலை வாயிலிலே சுற்றத் தொடங்கி விடுவர். அவர் வேட்டது போல் இவளைத் தராமல் இருந்தால், போரிடாது வறிதே செல்வாரல்லர் அவர். இப்போதே, இதுவரை நடந்த போர்களினால் தூர்ந்த அகழியும் தளர்ந்த ஞாயிலுமாகப் பகைவரால் அழிவு எய்தி விளங்கும் இப் பழையவூர், இனியும் என்ன ஆகுமோ?

சொற்பொருள்: 1. தூர்ந்த கிடங்கின் - தூர்ந்துபோன அகழியினையும்; சோர்ந்த ஞாயில் தளர்ந்த மதிலுறுப்பினையும். 2. சிதைந்த இஞ்சி இடிந்த மதிலையுமுடைய கதுவாய் மூதூர் - பகைவர் செய்த அழிவால் வடுபட்ட பழைய ஊர். 3. தாங்காது யாங்காவது கொல் போரைத் தாங்காது ஆகலின் என்னாகுமோ?

351. தாராது அமைகுவர் அல்லர்! பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

("வேந்தர், இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்’ என்று கூறி, அதனால் வந்தெய்தும் போரையும், அழிபாடுகளையும் நினைந்து வருந்துகின்றார் புலவர். எயினனின் வாகை என்னும் ஊரது வளத்தையும் செய்யுள் உணர்த்துகின்றது)