பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

339


கொடுப்பவும் கொளாஅனெ.

- - - - - - - - ர்தந்த நாகிள வேங்கையின், கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும் சிறுகோல் உளையும் புரவி.ெ........... 15

- - - - - - - - - - - - - 8 to a a -- யமரே.

வெண்ணல் வேலியாக நாற்புறமும் சூழ்ந்துள்ள, வள்ளல் தித்தனுக்கு உரித்தான வளமிக்க உறையூரையே கொடுத்தாற் போல, ஏராளமான அணிகலன்களைக் கொடுப்பவும், இவள் தந்தை பெற்றுக்கொண்டு தன் மகளை அவ் வேந்தன் மகனுக்குக் கொடுப்பானல்லன். இவளோ, கொத்துக் கொத்தாகப் பூத்த வேங்கைப்பூவின் தாதுக்களைப் போலத் தன் மார்பகம் சுணங்குகளால் நிறையக், கருங்கண்ணுடன் விளங்கும் முலைகளையும் உள்ளவள். இவள் தமையனும் குதிரைகளுடன் போராடும் மாவீரன்! இவளை மணப்பவர்தாம் யாவரோ?

353. 'யார் மகள்?’ என்போய்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

('இவள் யார் மகளோ? என, அவளது கவினால் தன் சிந்தை தளர்ந்த தலைவன் ஒருவன் கேட்கின்றான். அவனுக்கு, அவளைப் பெறுதல் அரிதெனக் கூறுவாராக, அவளது அண்ணன்மாரின் மறமேம்பாட்டை உரைப்பது இச் செய்யுள் 'அஞ்சுதக உடையர் இவள் தன்னைமார் என்கின்றார் புலவர்) -

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத், தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித் தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை 5 வினவல் ஆனா வெல்போர் அண்ணல்! 'யார் மகள்?’ என்போய் - கூறக் கேள்! இனிக் குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்குபத மாற்றாத் 10 தொல்குடி மன்னன் மகளே! முன்நாள் - கூறி வந்த மாமுது வேந்தர்க்கு

SCCCC S S S S S S S S S S CCS S S S S