பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

புறநானூறு - மூலமும் உரையும்




உழக்கிக்குருதி ஒட்டிக், கதுவாய் போகிய நூதிவாய் எஃகமொடு, 15 பஞ்சியும் களையாப் புண்ணர், அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே! பொன்மணி பல புனைந்த மேகலையும், பொற்கண்ணியும் ஒப்பனை செய்துகொண்டு, மணல் மேட்டிலே நடந்து செல்லும் இவள் சாயலை நோக்கி அறிவழிந்து, தேரையும் நிறுத்திக், கண்ணும் வெளுத்துத் தோன்றுகின்றாய், கேட்கக் கேட்க அமையாத போர் வெற்றிச் சிறப்புடையவனான அண்ணலே! இவள் யார் மகள் என்கின்றாயோ? சொல்வேன் கேள்; குன்றுபோற் குவித்த நெல்லை, வல்வில் இளையரான போர் மறவர்க்கு நாளுணவாக நல்கும் பெரும் படைத் துணையினை யுடைய பழங்குடி மன்னனின் மகள் இவள்! முன்னொரு சமயம் இம் மகளை வேட்டுவந்த நிறைவுடைய வேந்தர்க்கு நேர்ந்ததை நீ அறியாய். போர்க்களத்திலே செந்நீர் ஆறாக ஒடிற்று. இவள் தமையன்மாரோ, வாய் மடிந்து வடுப்பட்ட கூர்வாய் வாளுடன், இன்னமும் புண்ணிலிட்ட பஞ்சினை நீக்காதவராகக் கண்டார் அஞ்சும் தகைமையுடன் விளங்குகின்றனர் - அறிவாயாக!

சொற்பொருள்: ஆசுஇல் கம்மியன் - குற்றமற்ற பொற் கொல்லன். 8. நிலைப்பல போர்பு - நிலையினையுடைய பல நெற் போர்களை 9. நாள்கடா அழித்த நாட்காலையில் அழித்துக் கடாவிடப்பட்ட கடாவிடல்-பிணை கட்டியடித்தல்.நனந்தலைக் குப்பை - அகன்றவிடத்துக் குவிந்த நெல்லை.

354. நாரை உகைத்த வாளை பாடியவர்: பரணர். திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

('மான் பிணை அன்ன மகிழ்மட நோக்கை உடைய மடந்தை இவள். ஆயின், அந் நோக்குத்தான் இவ்வூரையே அழிக்கும் போலும் என்று வருந்திக் கூறுகின்றார் ஆசிரியர்)

அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்; வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக், கயலார் நாரை உகைத்த வாளை 5 புனலாடு மகளிர் வளமனை ஒய்யும் ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;