பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

343


தொக்குஉயிர் வெளவுங் காலை, இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.

இவ்வுலகம் பொதுமை என்று சுட்டிப் பேசிய மூவேந்தர் நாடும் பொதுமையறத் தாம் ஒருவரே ஆண்ட பெருவேந்தருக்கும், வாழ்நாட்கள், இறுதியிலே முடிவுதான் எய்தின. அவர் திரண்ட செல்வமும் அதனைத் தடுக்கும் துணையாக அமையவில்லை. அதனால், அறச்செயல் ஒன்றே புகழினை நிலைநிறுத்தும் சிறந்த துணையாகும் என உணர்க. அந்தத் துணையாகிய பணியை விட்டவர்க்கு நிலைத்த பேறு கிடைப்பது என்றும் அரிதாகும். வாழ்க்கைத் துணையான இல்லாள் அழுதரற்றக் கூற்றம் வந்து உயிரினைக் கவர்ந்து செல்லுங் காலத்திலே, இவ்வுலகிலே உடலையொழித்துப் புகழால் நிலைபெறுவதற்கு அஃதொன்றே வழியாகும்!

358. விடாஅள் திருவே!

பாடியவர்: வான்மீகியார் திணை: காஞ்சி. துறை: மனையறம்,

துறவறம். :

(துறவறத்தின் சால்பை எடுத்துக் கூறி, அதனை மேற் கொள்ளுதற்கு ஏலாதவரே இல்லறத்தினை மேற்கொள்ளற்கு

உரியர் என்பதும், அதனை ஆற்றுதற்குச் செல்வம் இன்றியமை

யாதது என்பதும் கூறுகின்றது செய்யுள். இச் செய்யுளின் பொருளமைதி இராமனின் துறவை நினைவுபடுத்துவதனையும் நினைத்து உணர்ந்து இன்புறுக)

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே! வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின், கைவிட்டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள், திருவே, 5

விடாஅதோர்.இவள் விடப்பட்டோரே.

கதிரவனைச் சுற்றிவரும் இவ் வளம் செறிந்த மாநிலம் ஒரு பகல் நேரத்திலும் எழுவரைத் தலைவராகக் கொள்ளும் நிலையாமையினை உடையது. உலகும் த்வமும் ஆகிய இரண்டினையும் ஆராய்ந்தால், தவத்திற்கு ஐயவி போன்றது உலக வாழ்வான இல்லறம். தவஞ்செய்தலும் இயலாதது ஆதலின், காதலர்கள் அதனைக் கைவிட்டு உலக வாழ்விலே இல்வாழ்வு மேற்கொண்டனர். அதனால், துறவறத்தை விட்ட இல்லறத்தாரையே உலக இன்பந்தரும் செல்வமும் விடாமல்