பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

347


கலந் தளைஇய நீள்இருக் கையால் பொறையொடு மலிந்த கற்பின், மான்நோக்கின் வில்என விலங்கிய புருவத்து, வல்லென, 15

நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர் அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி, அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன், நில்லா உலகத்து நிலையாமை நீ 20

சொல்ல வேண்டா தோன்றல், முந்துஅறிந்த முழுதுஉணர் கேள்வியன் ஆகலின், விரகினானே.

கார்காலத்து இடிபோல உருமிக்கொண்டு வந்து, அருமையான உயிர்களைக் கவர்ந்து செல்லத் துடிதுடிக்கும் கூற்றமே எம் தலைவனாகிய இவன், நீ வருவது கண்டும், நினக்கு அஞ்சான் என்றறிவாயாக! வேள்வி முற்றிய அந்தணர்க்கு அருங்கலம் பலவும் தந்தனன். தாயினும் நன்றாகப் பலருக்கும் உதவினன். பாடிவரும் பாணருக்குக் குதிரையும் களிறும் வழங்கினன். பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளைத் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் அளித்தனன். பாடினிக்குப் பொன்னரி மாலையும், பாணர்க்குப் பொற்றாமரைப் பூவும் தந்தனன். தன்னோடு கலந்த அன்பினளான தன் காதலி தரும் மதுவை 'அமிழ்தம் என மாந்திக் களித்தனன். இகழ்வதற்குரியன எதுவுமே அவன் செய்திலன். நில்லா உலகம் இது நிலையாமை உடையது' என்று நீ சொல்லல் வேண்டாம். அவனே அதனை உணர்ந்து, இங்கே தன் புகழை நிலைநிறுத்தி, அது நிலைபெற்று நிற்குமாறும் செய்து விட்டனன். வாழ்க அவன்! -

362. உடம்பொடுஞ் சென்மார்!

பாடியவர்: சிறுவெண்டேரையார். திணை: பொதுவியல். துறை: பெருங்காஞ்சி. -

நிலையாமையை வலியுறுத்தி, அறநெறி பேணுதலைப் பற்றி அறிவுறுத்துவது செய்யுள்) -

ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த மதியுறழ் ஆரம் மார்பில் புரளப், பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப், பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர் செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி 5 அணங்கு.உருத் தன்ன கணங்கொள் தானை, கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,