பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

புறநானூறு - மூலமும் உரையும்


ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்

நான்மறை குறித்தன்று அருளாகா மையின் அறம்குறித் தன்று; பொருளா குதலின் 10 மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக்,

கைபெய்த நீர் கடற் பரப்ப,

ஆம் இருந்த அடை நல்கிச்,

சோறு கொடுத்து, மிகப் பெரிதும்

வீறுசால் நன்கலம் வீசி நன்றும், 15

சிறுவெள் என்பின் நெடுவெண் களரின், வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்

பகலும் கூவும் அகலுள் ஆங்கண், - காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு இல்என்று இல்வயின் பெயர; மெல்ல 20

இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி, உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.

ஒளிசெய்யும் மணிகள் செறிந்த ஆரம் மார்பிலே கிடந்து புரள, வீரப் போர்முரசம் பாசறையிலே முழங்க, பெருஞ் செயலாற்றல் மிக்க தமிழ் மறவர் போர் போர் என்று சொல்லி எடுத்த கொற்ற வெண்கொடியானது, அணங்கு போன்று காணும் பகைவரை வருத்தக் கூற்றம் படையொடும் வந்தாற் போலப் பகைவர் மேற்செல்லும் எம் தலைவனைக் காணுங்கள்! அவன் செயல் அருளாகாது. ஆகையால் நான்மறைகளில் குறிக்கப் படுவதும் அன்று. புறத்துறையான பொருள் ஆகலின், ஒழுக்க நூல்களில் குறித்துள்ளதும் அன்று. அந்தணர்க்கு அவன் ஈத்து வார்த்த நீரோ கடல் நீரளவு இருக்கும். இரவலர்க்கு ஊரும் சோறும் கொடுத்துப் பல கலன்களும் சிறப்புறத் தந்தனன். எல்லாம் எதற்காக? இடுகாட்டிலே தனக்கும் இடம் மெல்லமெல்லத் தயாராகி வருவதை உணர்ந்து, உயர்ந்தோர் நாட்டிற்குப் புகழ் உடம்போடு செல்வதற்கே, அவன் இவையெல்லாம் செய்தனன் என அறிவீராக!

சொற்பொருள்: 6 அணங்கு உருத்தன்ன - வருத்தம் செய்யும் தெய்வம் கோபித்து வந்தாற்போன்ற 11. மன் - வியப்பு மயக்கு ஒரீஇ - அவ் வியப்புக் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி. 363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!

பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார். திணை: பொதுவியல், துறை: பெருங்காஞ்சி.