பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

351


மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக, இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், 5 பொருநர்க் காணாச் செருமிக முன்பின் முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற, உள்ளேன் வாழியர் யான்' எனப் பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.

10

(1. குறுநீத்தம் - புறத்திரட்டு, 2. வாழி, 3. உரைப்பர் - புறத்திரட்டு)

"வான்முகத்திலே, சுடரும் மதியமும் இரு கண்களாகக் கொண்டு, இடையே காற்று எங்கும் நிலவும் இந் நில மகளாகிய என்னை நீத்து, மணியாரம் பூண்டு ஆட்சிச் சக்கரம் நடத்திய போர் வெற்றியாற் சிறந்தவரான, எனக்கு வாழ்வளித்த நின் முன்னோர் பலரும் சென்றனர். யானும் அவருடன் செல்லாது, பலரும் இகழ்ந்து பேசுவதும் கருதாது, விலைநலப் பெண்டிர் போல எந்நாளும் வாழ்கின்றேனே!” என்று, நிலமகளும் அழுகின்றனள். உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்தோர் இவ்வாறுதாம் உரைப்பார்கள்! அதனால், தலைவனே! புகழால் இங்கு என்றும் நிலைத்தற்கு உரியனவற்றைக் கருதிச் செய்வாயாக! ('விலைநலப் பெண்டிர் போல உள்ளேன் யான்' என்பதை, அவர் தம்மையே கூறியதாகக் கொண்டு, ‘என்றும் பதினாறு வயது மார்க்கண்டர் இவரே எனவும் கூறுவர்)

366. மாயமோ அன்றே!

பாடியவர்: கோதமனார். பாடப்பட்டோன்: தரும புத்திரன். திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி.

('அறவோன் மகனே! மறவோர் செம்மால்' எனத் தரும புத்திரனைக் குறிப்பிட்டு விளிக்கின்றார் இவர். பாரதத் தலைமகனே இவன் என்பதனை இது காட்டும். இதனால், இச் செய்யுளின் காலப் பழமையும், செந்தமிழின் காலப் பெரும்

பழமையும் விளங்கும்)

விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக, அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப, ஒருதா மாகிய பெருமை யோரும், தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந்தனரே