பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

புறநானூறு - மூலமும் உரையும்


'நிலவுலகம் தம்முடையதே என்று, ஆள்வோர் எந்நாளும் சொல்வதற்கில்லை. இதற்கு அயலவரேயாயினும் வலி மிகுந்தவரானால் இஃது அவர்பாற் சேர்ந்துவிடும். அதனால், பார்ப்பார்க்கு அவர் வந்து இரந்து நிற்கும்போது, பூவும் பொன்னும் நீருடன் வார்த்துத் தருக. மகளிர் பொற்கலத்திலே ஏந்தித் தரும் தேறலை உண்டு மகிழ்ந்து, வரும் இரவலர்க்கு அருங்கலம் குறையாது வழங்கி வாழ்க ஆராய்ந்தால், இவ்வுலகில் உயிரோடு இருக்கும் வரையும் புகழுடம்புடன் இங்கே நிலைத்து வாழச் செய்யும் நல்வினைகளன்றி, வேறு எதுவும் நமக்குத் துணையாக உதவாது. இரு பிறப்பாளர் செய்யும் யாகத்தைக் கண்டவராக இங்கிருக்கும், கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தரே! யான் அறிந்தவரை வாழ்வின் இலக்கணம் இதுவே யாகும். வானத்து மீனினும், வீழும் மாமழையின் துளிகளினும் நெடுநாள் நும் வாழ்நாள் விளங்குவதாக!

368. பாடி வந்தது இதற்கோ?

பாடியவர்: கழாத் தலையார் திணை: வாகை. துறை: மறக்களவழி. பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன். குறிப்பு : இவன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது, களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா முன்னர், அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச் செய்யுள். -

(அரசனை வேளாளனாக உவமித்துக் கூறியதனால் இத் துறை ஆயிற்று. அந் நிலையினும் அவனிடம் இரக்கும் புலவரின் நிலையையும், அதனை அப்போதும் கொடுத்த சேரனின் தகுதியையும் போற்றிக் கொள்க)

களிறு முகந்து பெயர்குவம் எனினே, ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக், கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன; கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே, கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி 5

நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந்தனவே; கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே, மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி, வளிவழக்கறுத்த வங்கம் போலக் குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க 10 முகவை இன்மையின் உகவை இன்றி, இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,