பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

25


'உண்டாகிய உயர் மண்ணும், சென்று பட்ட விழுக் கலனும், 25

பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும், 'ஏந்து கொடி இறைப் புரிசை, -

வீங்கு சிறை, வியல் அருப்பம், இழந்து வைகுதும், இனிநாம்; இவன் - உடன்று நோக்கினன், பெரிது’ எனவும் 30

வேற்று அரசு பணி தொடங்குநின்

ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,

காண்கு வந்திசின், பெரும ஈண்டிய மழையென மருளும் பல்தோல், மலையெனத் தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை. 35

உடலுநா உட்க வீங்கிக் கடலென வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப, இடியென முழங்கு முரசின், - வரையா ஈகைக் குடவர் கோவே! 40

இந் நாவலந்தீவு முழுவதும் ஒருகாலத்தே ஒரு குடைக் கீழ்ப் பேரரசாக ஆண்டவர் சேரர். தீத்தொழில் போக்கி அறம் பேணி ஆணை செலுத்திவந்த அரச மரபினர் அவர். அவர் மரபைக் காத்தவனே! தென்னையும் வயலும் மலையும் கடற்கரையுமாக விளங்கும் தொண்டித் துறையின் தலைவனே! யானைபடுங் குழியிலே செருக்கால் அறிவிழந்து வீழ்ந்தது ஒரு களிறு பின், அதனைத் தன் வலிய கொம்புகளால் தூர்த்துத் தானே வெளிப்பட்டுத் தன் இனத்தோடும் சேர்ந்தது. அஃதேபோல, நீயும் உற்ற தளர்ச்சி நீங்கிச், சூழ்ச்சியாற் பலரும் மகிழ, நின் சுற்றத்தார் நடுவே உயர்வுடன் வந்து விளங்குகின்றாய். நீ சிறைப்படு முன்னர், நின்னால் அடிமைப் படுத்தப்பட்டோர், நீ பிணிப்புண்டதும் தம்நாடும் பொருளும் மீட்டும் பெறலாம் என நினைத்தனர். அவ்வாறு எண்ணியோர் நின் வரவறிந்ததும், தாம் எடுத்த கொடியும் பிறவும் நிறுத்தி விட்டு, மீண்டும் நின்னைப் பணிந்து ஏவல் செய்யத் தொடங்கினர். பெருமானே! கார்மேகம் போலத் திரண்டெழும் பரிசைப் படையினையும், மலையென விளங்கும் யானைப் படையினையும், கடலெனப் பொரும் காலாட் படை யினையும், இடிபோல முழங்கும் முரசினையும் எல்லார்க்கும் எப் பொருளும் வரையாது வழங்கும் வண்மையினையும் உடையவனே! குட நாட்டினர் வேந்தனே! நீ வாழ்க!