பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

புறநானூறு - மூலமும் உரையும்


மின்னென வாள்கள் ஒளிவீச, அம்புகள் மழைபோலப் பொழிய, பாசறைக்கண்ணே இருக்கும் வேந்தனே! பொருந்தாத தெவ்வரின் தலையாகிய அடுப்பிலே கூவிளம் விறகிட்டு எரித்து ஆக்கும் கூழிலே, வரிக்குடர்கள் பிளந்து பொங்க, வன்னிமரக் கொம்பிலே மண்டை ஒட்டைச் செறுகி அகப்பையாக்கிக் கிண்டி, ஈனாத பேய்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த நிணச்சோற்றைப் பேய்மகன் ஏந்திக்கொற்றவைக்குப்படைக்கத் திருமண விழாவிலே விருந்தினர்க்கு நீர் வார்த்துப் பரிசில் வழங்குவது போலக் களவேள்வி செய்த பெருமானே தடாரி ஒலித்து நின்னிடம் வந்ததெல்லாம், நின் நிலவொளி வீசும் முத்தாரத்தைப் பரிசிலாகப் பெறும் பொருட்டே யாகும்!

373. நின்னோர் அன்னோர் இலரே!

பாடியவர்: கோவூர்கிழார். பாடப்பட்டோன். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: வாகை. துறை: மறக்களவழி ஏர்க்கள உருவகமும் ஆம்.

(அரசனை உழவனோடு ஒப்பிட்டுப் பாடியதனால் மறக்களவழி ஆயிற்று. போர்க் களத்தை ஏர்க்களத்தோடு உவமித்தலால் ஏர்க்கள உருவகமும் ஆம் இடையிடையே சிறிது சிதைந்து போயின செய்யுள் இது) -

உருமிசை முழக்கென முரசம் இசைப்பச், செருநவில் வேழம் கொண்மூ ஆகத், தேர்மா அழிதுளி தலைஇ, நாம்உறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை, இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் 5

பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப, மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக், கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே!

  • * * * * * * * * * * * * * * * * * * se தண்டமாப்பொறி மடக்கண் மயில்இயல் மறலி யாங்கு 10

நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து, மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,

ισόπΦευ.................................. * * * * * * * * * அணியப் புரவி வாழ்கெனச்,

சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர, நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர் 15

அம்பழி பொழுதில் தமர்முகம் காணா,