பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

புறநானூறு - மூலமும் உரையும்



அழித்துக் குடநாட்டின்கண் கடாவிட்டனையே! நின்போர்க்களம் சிறப்பதாக! "வேந்தனின் போர்க்களம் பாடி, யானைப் பரிசில் பெற்றோம்’ எனச் சொல்வர் பெரியோர். அது கொண்டு, யானும் தடாரி கொட்டி, நின் ஒப்பார் பிறர் இல்லாததனால், நின்பால் வந்தேன். பெருமானே! நீ பகைவர்பால் கவர்ந்த பொருள்களைப் பரிசிலாகக் கொள்ள விரும்பினேன். பகைவரும் புகழும் ஆண்மையும், நண்பர்க்கு உதவும் நற்பண்பும் உடையவனே பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இக்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் கூடிக் காணவும் அச்சந் தருகின்றனவே! இத்தகைய கொடிய போர்க்களத்தை உரிமையாகக் கொண்டவனே! எமக்கும் பரிசில் அருள்வாயாக!

374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: பூவைநிலை.

(ஞாயிற்றினும் சிறந்தவன் ஆய் அண்டிரன்’ என எடுத்துக் கூறிப் போற்றுகின்றது செய்யுள்."புலிப்பல் தாலிப் புன்றலைச் சிறா அர்’ என்றது, தமிழ்க்குடிச் சிறுவர்கள் புலிப்பல் தாலி சூடியிருக்கும் மரபினை விளக்கும்)

கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும் புல்வாய் இரலை நெற்றி யன்ன, பொலம்இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத் தண்பனி உறைக்கும் ஞாங்கர், மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என் 5 தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக் கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப், புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர் மான்கண் மகளிர், கான்தேர் அகன்றுஉவா 10

சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை, விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம், புகர்முக வேழத்து மருப்பொடு, மூன்றும், இருங்கேழ் வயப்புலி வரிஅதள் குவைஇ,

விரிந்துஇறை நல்கும் நாடன், எங்கோன், - 15 கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல, வண்மையும் உடையையோ! ஞாயிறு? : கொன்விளங் குதியால் விசும்பி னானே!