பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

புறநானூறு - மூலமும் உரையும்


நிலீஇயர் அத்தை நீயே! ஒன்றே நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப் பெரிய ஒதினும் சிறிய உணராப்

பீடின்று பெருகிய திருவின், 20

பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே!

'உழவர் இல்லந்தோறும் வீடுவீடாகச் சென்று இரந்து உண்ணும் இரவன் மாக்கள் ஆயினேம். எம்மைப் பாதுகாத்தலை அருளோடும் மேற்கொள்ளும் சான்றோர் யார்? எனத், தேன்கூடுகள் தூங்கும் புதுவருவாய்மிக்க மலைநாட்டுப் பொருநனே! நின்னை நாடி வந்தோம். பொய்யா ஈகையும் கழல் தொடியும் உடைய நல்ல நாட்டிற்கு உரிய ஆய்வேளே! கிணையைக் கொட்டிப் பரவுதற்கேற்ப எம்மைப் புரந்து ஆதரிப்போரோ வேறு எவரும் இலர். ஆதலின், அங்கு நின்றும் கெடாமல் கடலை நோக்கி மேகங்கள் செல்வதுபோல ஒப்பற்ற நின்னையே நாடி வந்தோம். நீ ஒருவனே புலவர்க்குப் புகலிட மாவாய்! நிலவுலகம் உள்ளவரை நீ இன்பமுடன் வாழ்வாயாக! நீ இல்லையானால் இவ்வுலகமே புலவராகிய எம்மைப் பொறுத்தவரையில் வறுமையுற்றதாகி விடும். புலவரும் நீ இல்லாத உலகத்தில் வாழ்வாரோ? பெரிதாகப் புகழ்ந்து பாடினும் சிறியராகி, எங்கள் தன்மையை உணராத செல்வம் உடைய மன்னரே நாட்டிற் பெருகியுள்ளனர். அவரை ஒரு பொருட்டாக மதித்து, எம் புலவர் இனிப் பாடார் என்றும் நீ அறிவாயாக!

376.கிணைக்குரல் செல்லாது

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன். ஓய்மான் நல்லியாதன். திணை: பாடாண். துறை: இயன் மொழி.

(அரசனது கொடுத்தலிற் சிறந்தோனாக விளங்குதலாகிய இயல்பு மேம்பாட்டை எடுத்துக் கூறிப் போற்றுகின்றது செய்யுள். பாணரது வறுமை நிலையையும் இதனாற் காணலாம்)

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி சிறுநணி பிறந்த பின்றைச் செறிபிணிச் சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப் பாணர் ஆரும் அளவை, யான்தன் 5 யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்! இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக், குணக்குஎழு திங்கள் கனைஇருள் அகற்றப்,