பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

புறநானூறு - மூலமும் உரையும்


மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே, அதுகண்டு, இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல். விரல்செறி மரபின செவித்தொடக் குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், 15

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும், மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை, நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின் 20

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு, அறாஅ அருநகை இனிதுபெற்றிகுமே இருங்கிளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

தென் பரதவரின் குறும்புகள் அடங்கி ஒடுங்கவும், வட வடுகரின் வாளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள் நீங்கவும், அவரை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்! இச் சோழனின் நெடுநகரிலே, வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று, என்னுடைய கிணையை இயக்கி, எஞ்சா மரபினனான சோழனின் வஞ்சிச் சிறப்பைப் போற்றிப் பாடினேன். எமக்கென இயற்றப் படாத, அரசர்க்கே உரிய நல்ல அணிகலன்கள் பலவற்றையும், அவன் எமக்கு ஏராளமாக அளித்தான். அதனைக் கொண்டு, என் சுற்றத்தாரின் சென்று கொடுத்தேன். அவர்கள் கண்டு திகைத்தனர். விரலில் அணிவன செவியினும், செவியில் அணிவன விரலினும், அரைக்குரியன கழுத்திலும், கழுத்திற்குரியன இடையிலுமாக மாறிமாறி அவர்கள் அணிந்தனர். 'சீதையின் அணிகளைக் கண்டெடுத்த குரங்கினம் அணிந்ததென இராமாயணக் கதையிலே சொல்லப்படும் தன்மைபோலிருந்தது அந்தக் காட்சி! என் சுற்றத்தின் வறுமையும் அத்துடன் தொலைந்தது! அவர் முகத்திலே நகையும் அரும்பிற்று! .

379. இலங்கை கிழவோன்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன்: ஓய்மான் வில்லியாதன். திணை: பாடாண். துறை: பரிசில்.

(பரிசில் பெற்ற புலவர் அவனைப் போற்றிப் பாடுகின்றனர். 'இலங்கை கிழவன் என, இவன் குறிக்கப் பெறுகின்றான்)

யானே பெறுக, அவன் தாள்நிழல் வாழ்க்கை அவனே பெறுக, என் நாஇசை நுவறல்,