பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

புறநானூறு - மூலமும் உரையும்


தென் பவ்வத்து முத்துப் பூண்டு வட குன்றத்துச் சாந்தம் உரீஇ

.ங்கடல்தானை,

இன் னிசைய விறல் வென்றித்

தென்னவர் வயமறவன், 5

மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து, நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய,

தேறுபெ. த்துந்து, o தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்; துப்புஎதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன், 10

நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன், வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல,

-- - - - - - த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்; அன்னன் ஆகன் மாறே, இந்நிலம் - இலம்படு காலை ஆயினும், 15

புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே.

தென்கடல் முத்தும், வடகுன்றத்துச் (பொதிய மலை) சாந்தமும், கடல்போன்ற தானையும், புகழ்பெற்ற ஆண்மையும், வெற்றிச் சிறப்பும் உடைய பாண்டியரின் படைத் தலைவன் மழை நீர் கடற்குள் சென்று முத்தமாகும், மணமிக்க மலைமல்லிகை யோடு கூதாளியும் தழைத்து விளங்கும்; தீஞ்சுளைப் பலா மரங்கள் எங்கும் நிறைந்திருக்கும் நாஞ்சில் நாட்டின் தலைவன். பகைவராக எதிர்த்தவர்க்கோ அணுக இயலாத வலியுடையவன். நட்பாக வந்து அணுகுவோர்க்கோ உள்ளங்கைபோல உதவும் தன்மையன். வலிய வேலினைக் கைக்கொண்டு கந்தனைப்பேன்ற ஆண்மையும், சிறுவில் கொண்டு விளையாடும் பிள்ளைகளைப் போன்ற தெளிந்த கபடற்ற உள்ளமும் உடையவன்! இவ்வுலக மக்கள் எல்லாம் வறுமையால் வருந்துங் காலத்திலும், என் சுற்றம் இனி எந்நாளும் வருந்துதலே கிடையாது!

381. கரும்பனூரன் காதல் மகன்! பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான். திணை: பாடாண். துறை: இயன் மொழி.

(கரும்பனூரன் வேங்கடநாட்டைச் சார்ந்தவன்.கொடையிற் சிறந்தவன். அவனியல்பைப் போற்றுகின்றது செய்யுள்)

ஊனும் ஊணும் முனையின் இனிதெனப், பாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்