பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

புறநானூறு - மூலமும் உரையும்


கொண்டிருந்த கலத்திலே பசும்பால் நிரம்பி வழியவும், சூடாக நிறைய உண்டதால் வியர்ப்புத் தோன்றாதவாறு புகழ் தனதே யாகுமாறு அவன் வழங்கினான். அவன் நாடு வளமிக்கது. வயல்கள், நெல்சூழ்ந்த கரும்புப் பாத்தியிலே நீர்ப்பூக்கள் நிறைய விளங்கும். காடுகள், புல்லருந்தும் பல்வகை ஆநிரைகளுடனும், வில்லேந்திய காவல்காக்கும் வீரர்களுடனும் விளங்கும். கடற்கரையிலே நின்று, காற்றினால் இயக்கப்பட்டுக் கரைவந்து சேரும் கலன்களை எண்ணுவோரால், புன்னை மரங்களின் பூங்கொத்துக்கள் உதிர்ந்து வீழும். உப்பங்கழிகளைச் சார்ந்த இடங்கள் சிறுவெள் உப்பினை விலை கூறி விற்றுவரும் உமணரின் ஆரவாரத்தால் நிறைந்திருக்கும். அத்தகைய சோழவள நாட்டுப் பொருநர் யாம். போரிடாத பொருநர் யாம். வெள்ளி எங்கும் நிற்க! யாம் வேண்டியது உணர்ந்து ஈபவன் அவன். அதனால், யாம் இதுபற்றி ஏதும் எண்ணுவதில்லேம்; வாழ்க, அவன் தாள்கள்!

387. சிறுமையும் தகவும்!

பாடியவர்: குண்டுகட் பாலியாதனார். பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன். திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(தன் பெருமையின் தகவு நோக்கி ஈத்து உவந்த சோழனை வாழ்த்துகின்றார் புலவர். 'ஊழி வாழி பூழியர் பெருமகன்’ என்று நாவாரப் போற்றி வாழ்த்துதல் காண்க)

வள் உகிர வயல் ஆமை

வெள் அகடு கண் டன்ன,

வீங்கு விசிப் புதுப் போர்வைத் - தெண்கண் மாக்கிணை இயக்கி, "என்றும் மாறு கொண்டோர் மதில் இடறி, 5

நீறு ஆடிய நறுங் கவுள

பூம்பொறிப் பணை எருத்தின,

வேறு வேறு பரந்து இயங்கி,

வேந்துடை மிளை அயல் பரக்கும், ஏந்துகோட்டு இரும்பினர்த் தடக்கைத், - 10

திருந்து தொழிற் பல பகடு பகைப்புல மன்னர் பணிதிறை தந்து, நின் நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி, மிகப் பொலியர், தன் சேவடியத்தை" என்று யாஅன் இசைப்பின், நனிநன்று எனாப், 15