பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

381


பாடுவேன். பாடேனாயின், மணி விளங்கும் முற்றத்துத் தென்னவன் வழியினன், முரசு முழங்கும் தானையன் ஆகிய பெருமைமிக்கவழுதியும், என் சுற்றத்தைப் புரந்து அருள் செய்யாது போவானாகுக!” - - . .

389. நெய்தல் கேளன்மார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார். பாடப்பட்டோன்: ஆதனுங்கன் திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(ஆதனுங்கனின் கொடை இயல்பினைப் போற்றித் தமக்கும் உதவி செய்து அருளுமாறு கேட்கின்றார் புலவர்)

'நீர் நுங்கின் கண் வலிப்பக்

கான வேம்பின் காய் திரங்கக்,

கயங் களியும் கோடை ஆயினும்,

ஏலா வெண்பொன் போருறு காலை,

எம்மும் உள்ளுமோ பிள்ளை.அம் பொருநன்! 5

என்றுஈத் தனனே, இசைசால் நெடுந்தகை; இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன், செலினே, காணா வழியனும் அல்லன், புன்தலை மடப்பிடி இணையக், கன்றுதந்து, குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், 10 கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன், செல்வழி எழாஅ நல்லேர் முதியன்! ஆதனுங்கன் போல, நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி, பெரும! 15 ஐதுஅகல் அல்குல் மகளிர் நெய்தல் கேளன்மார், நெடுங்கடை யானே! 'நீர் நிறைந்த நுங்கின் கண்கள் கல்லாகி வலுப்பட்டுப் போக, வேம்பின் காய்கள் உலர்ந்துபோகக், கயங்கள் நீர் வற்றி உலர்ந்து களிப்பட விளங்கும் கோடையே யாயினும், பிள்ளையம் பொருநனே! நீ என்னை நினைத்து வருக என்று கூறிக் கொடுத்தான், புகழால் மேம்பட்ட நெடுந்தகையான ஆதனுங்கன். இன்று சென்று அவனைக் காண வழியில்லை. அவன் இருந்து சென்றால், காணாத நிலையினனும் அல்லன். யானைக் கன்றுகளை மன்றத்திலே பிணிக்கும் குன்றக நல்லூர்த் தலைவனே! வேங்கடமலைக்கு உரியவனே மனம்போன போக்கில் செல்லாது நன்றின்பாலேயே செல்லும் நல்லேர் முதியனே! ஆதனுங்கனைப்