பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

புறநானூறு - மூலமும் உரையும்


போலவே, நீயும் பசித்த என் சுற்றத்தின் துயரம் நீங்கச் சிறந்த அணிகலன்களை வழங்குவாயாக. பெருமானே! நின் இல்வாழ் மகளிர் நின் முற்றத்திலே நெய்தற்பறை முழங்கக் கேளாதார் ஆகுக!

390. காண்பறியலரே

பாடியவர்: ஒளவையார். பாடப்பட்டோன். அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பாடாண். துறை: இயன் மொழி.

(அஞ்சியின் ஈத்துவக்கும் இயல்பு மேம்பாட்டை எடுத்துக் கூறி, அவனைப் போற்றுகின்றது செய்யுள். 'திருமலர் அன்ன புதுமடி என்பது, அக் காலத்தைய நெசவுத் தொழிலின் முன்னேற்ற நிலையை நமக்குக் காட்டும்)

அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் மறவை நெஞ்சத்து தாய்இலாளர், அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ், விழவணி வியன்களம் அன்ன முற்றத்து, ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் 5

கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர், மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப, வென் அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்

பாடி நின்ற பன்னாள் அன்றியும், சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின், 10

வந்ததற் கொண்டு, நெடுங்கடை நின்ற புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத், தன்உழைக் குறுகல் வேண்டி, என்அரை முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து, திருமலர் அன்ன புதுமடிக் கொளி.இ மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும், அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில் வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி, முன்னுர் பொதியில் சேர்ந்த மென்நடை இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற, 20

அகடுநனை வேங்கை வீகண் டன்ன பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக், கொண்டி பெறுக!' என்றோனே; உண்துறை மலைஅலர் அணியும் தலைநீர் நாடன், கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி, 25