பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

383


வான்.அறியலவென் பாடுபசி போக்கல்; அண்ணல் யானை வேந்தர் உண்மையோ, அறியலர், காண்பறியலரே!

ஆயரும் சிறுகுடியினரும் கூடி விழாக் கொண்டாடும், செருந்திமலர் நிறைந்த மன்றம்போன்ற அஞ்சியின் அரண்மனை முற்றத்தினை ஆர்வலர் சேர இயலுமேயன்றி, அவனைப் பகைத்த காவலரோ கனவிலும் அடைதல் அரிது. அத்தகைய காவலுடைய பெருநகரிலே, குன்றுகள் போன்ற அவனது மாடங்கள் எதிரொலிக்க, என் கடாரியை அறைந்து அவன் புகழைப் பாடி நின்றேன். பல நாட்களுமன்று யான் சென்ற அன்றே, அன்று இரவிலேயே, யான் வந்ததை உட்கொண்ட அவன், தன்பால் வருவதற்காக, முதுநீர்ப்பாசிபோன்ற என் உடையினைக் களைந்து, திருமலரன்ன புதுமடி உடுத்தச் செய்தனன். சென்று கண்டேனாக, மகிழ்வுதரும் கள்ளும் அமிழ்து போன்ற ஊன் துவை அடிசிலும் வெள்ளிவெண் கலத்தே ஊட்டினான். அன்றியும், ஊருக்கு முன்புறப் பொதியிலில் பசித்திருந்த என் சுற்றத்தாரின் பசி தீரும் பொருட்டுப் போரோடு செந்நெல்லும் அளித்தான். இவை எல்லாம் பெறுக!' என்றும் கூறினான். அண்ணல் யானை வேந்தனது உள்ளத்தையும், அவனைக் காண்பதையும் அறியாதவரே, கண்ட பிறரைக் கொண்டு அவர் அடி வாழ்த்தித் துயருற்று, மழையும் பெய்திலதே என்று வாடுவோராவர்.

391. வேலி ஆயிரம் விளைக!

பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன். பொறையாற்றுக் கிழான். திணை: பாடாண். துறை: கடைநிலை. «sa

(பொறையாற்றுக் கிழானின் வாயிற் கடையிலே நின்று, 'கண்டு வந்திசின் பெரும, எமக்கும் உதவுக' என்று வேண்டி, துளி பதன் அறிந்து பொழிய, வேலி ஆயிரம் விளைக நின் வயலே என வாழ்த்துகின்றார் புலவர்)

தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண்தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி 5 அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் வேங்கட வைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்