பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

புறநானூறு - மூலமும் உரையும்


('சோழனின் அருள் உள்ளச் செவ்வியைப் பாடுகம் என்று கூறிப் பாடுகின்றார் புலவர். 'போதுவிரி பகன்றைப் புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇச் செல்வமும் கேடின்று நல்குமதி பெரும!’ என்று பாடுகம் என்கின்றனர்)

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறுநெடுந் துணையொடும் கூமை வீதலிற், குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி, அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும் கடன்அறியாளர் பிறநாட்டு இன்மையின், 5

"வள்ளன் மையின்எம் வரைவோர் யார்?' என உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா, உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென, மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி, ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் 10

கூர்ந்த எவ்வம் வீடக் கொழுநிணம் கிழிப்பக், கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன, வெண்நிண மூரி அருள, நாளுற . ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் - 15

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப், போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன, அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும் கேடின்று நல்குமதி, பெரும மாசில் மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி 20

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக், கோடையாயினும் கோடி. காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந: வாய்வாள் வளவன் வாழ்க! எனப்

பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே. 25

"சோறு சமைப்பதையே மறந்த எம் பானையை, மீண்டும் மலரச் செய்யும் கடமையை அறிந்த புரவலர் எவரும் பிற நாடுகளில் இல்லாத காரணத்தால், வள்ளன்மையோடு எம்மை வரைந்து உதவுவோர் யாவரோ?' என நினைத்த நெஞ்சத்தோடு, உலகமெல்லாம் ஒருவழிப் பட்டதென்று பேரரசு ஆளும் நின்னையே துணையாக நம்பி வந்தேம். மலர்த்தார் அணிந்த அண்ணலே! நின் புகழைக் கேட்டேம். ஈரமான கை என்பதையே மறந்த எம் பெருஞ்சுற்றம் அடைந்த கொடுந்துயர் தீருமாறு உதவுக.