பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

புறநானூறு - மூலமும் உரையும்


இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும், "துன்னரும் பரிசில் தரும் என என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே!

வில் பயிற்சி மிகுந்ததால் நிமிர்ந்து விளங்குவதும், சாந்தம் பூசியதுமான மார்பினை யுடையவன்; நீர்வள மிக்க கழனிகளும், கொற்ற வெண்குடையும் உரிமையாகக் கொண்டவன்; வலிமை யெல்லாம் புகலிடமாகக் கொண்ட பெரிய கையினையும், தப்பாத வாளினையும் உடையவன்; அவனே குட்டுவன் என்பான். வையகம் அவனை வள்ளல் என்று புகழினும், உயர் மொழிப் புலவர்களே! அவனிடம் செல்லலாம் என நினையாதீர்கள். யான் ஒரு நாள் காலையில் அவன்பால் சென்றேன். வாடாத வஞ்சிப்பண் பாடினேன். அவனும் உள்ளம் மகிழ்ந்தவனாக வெஞ்சின வேழம் ஒன்றை எனக்கு நல்கினான். அதனை யான் வேண்டாமென அவன் பால் திருப்பவும், அது சிறிது’ எனக் கருதினேன் எனக் கொண்டு நாணினவனாக, மற்றுமோர் பெருங் களிற்றினையும் தந்தான். அதன் பின்னர், என் சுற்றம் எத்துணையளவு துயரம் கொண்டாலும், அவன்பால் ஒரு நாளும் யான் செல்லவே மாட்டேன். -

395. அவிழ் நெல்லின் அரியல்:

பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன். சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை.

(சாத்தனிடம் சென்று தாம் பெற்ற பரிசிலை வியந்து பாடுகின்றார் நக்கீரர், “தன் மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, 'இவனை என்போற் போற்று' என்றனன் என்று, அவனது பெருஞ்சால்பை நினைந்து பூரிப்படைகின்றது புலவரின் நெஞ்சம்)

மென் புலத்து வயல் உழவர்

வன்புலத்துப் பகடு விட்டுக்

குறு முயலின் குழைச் சூட்டொடு நெடு வாளைப் பல் உவியல்

பழஞ் சோற்றுப் புக வருந்திப்,

புதல்தளவின் பூச்சூடி,

அரில் பறையாற் புள்ளோப்பி, அவிழ் நெல்லின் அரியலா ருந்து, மனைக் கோழிப் பைம்பயிரின்னே, - காணக் கோழிக் கவர் குரலொடு, 10