பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

391


வள நனையின் மட்டு என்கோ? குறு முயலின் நிணம் பெய்தந்த

நறுநெய்ய சோறு என்கோ?

திறந்து மறந்து கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு எங்கோ? 2O

அன்னவை பலபல.


வருந்திய

இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை, எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே, 25

மாரிவானத்து மீன் நாப்பண்,

வரி கதிர வெண் திங்களின், விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல்லிசை யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்

நிரைசால் நன்கலன் நல்கி, 30

உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே!

மருத வளமிக்க நாட்டிடையிலே, கள் நிறைந்த வீட்டினராக வாழும் கோசர் மதுவுண்டு குரவையாடும் ஒலிமுழங்கும். அந் நீர்வளமிக்க வாட்டாற்றிற்கு உரியவன் எழினியாதன் என்பவன். அவன் பகைவரை அழிக்கும் வன்மையோனாகவும் விளங்குபவன். வெல்லும் வேலினையுடைய வேளிரின் தலைவன் அவன். யான் அவனுடைய கிணைப் பொருந ராவேம். பெருமானே! அவன் அளித்த சூட்டிறைச்சியினைச் சொல்வேனோ? அவன் தந்த கள்ளைச் சொல்வேனோ? முயற்கறியிலே ஆக்கித்தந்த நெய்ச் சோற்றை சொல்வேனோ? நெற்கரிசையைத் திறந்துவிட்டு வேண்டுமளவு முகந்து கொள்ளுக என்றானே, அதனைச் சொல்வேனோ? எதனைச் சொல்வேன்? அவ்வாறு அவன் தந்தனவோ பலப்பல. என் சுற்றம் பசி தீர்ந்து இன்புற, அருளோடு, மீண்டும் மீண்டும் கொடுத்த அருளாளன் அவன். அவன் புகழ் விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் நிலவுபோல விளங்குக! புலவர் போற்றிப் பாடும் உயர்வுடைய அவன் செல்வமும் நாளும் பெருகுக! -

397. தண் நிழலேமே!

பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பாடாண். துறை: பரிசில் விடை கடைநிலை விடையும் -L).