பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

393


நினைந்து வந்துசேர்ந்த இரவலன் இவன்’ என்று சொல்லி, நெய்யிலே பொரித்த தாளிதத்துடன் கூடிய சூடான இறைச்சியையும், கள்ளுத் தெளிவினையும் உண்ணத் தந்தான். பூவேலை செய்யப்பட்ட மெல்லிய ஆடையினையும் தந்தான். என் வறுமை தீருமாறு மழைபோலச் செல்வங்களையும் வழங்கின்ான். அருங்கலன் பலவும் தந்தான். வாட்படை கொண்டு தப்பாது பகைவரை வென்று பெற்ற பொன்னால் ஆகிய அணிகலன் பல பூண்டு விளங்குபவன் அவன். ஆகவே, ஊழி வந்து உலகமே அழியினும், 'என்னே?’ என்று யாம் அஞ்சுவேம் அல்லேம். வளவனின் நிழலில் அன்றோ யாம் இருக்கின்றேம்! எமக்கென்ன குறை இனி?

398. துரும்புபடு சிதாஅர்!

பாடியவர்: திருத்தாமனார். பாடப்பட்டோன் : சேரமான் வஞ்சன். திணை: பாடாண். துறை: கடைநிலை.

(சேரமானின் அரண்மனை வாயிலில் நின்று, அவனைப் போற்றிப்பாடிப் பரிசில் வேண்டுகின்றார் புலவர்.அவன் விரைந்து வந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்த அந்தப் பெருந்தகைமையால் இவர் உள்ளம் பெரிதும் களி கொள்ளுகின்றது. அந்தக் களிப்போடு பாடிய செய்யுள் இது)

மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,

வகைமாண் நல்லில்.....

பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,

பொய்கைப் பூமுகை மலரப் பாணர் -

கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, 5

இரவுப் புறம்பெற்ற ஏம வைகறைப், பரிசிலர் வரையா விரைசெய் பந்தர் வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல்லளை போலத், 1O

துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர், மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி, இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, 'உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! தள்ளா நிலையை யாகியர் எமக்கு என, 15

என்வரவு அlஇச்,

சிறிதிற்குப் பெரிதுஉவந்து, விரும்பிய முகத்த னாகி, என்அரைத்