பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

397


கேள்வி மலிந்த கேள்வித் தூணத்து இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் 20 தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத், துறைதெறும் பிணிக்கும் நல்லூர், உறைவின் யாணர், நாடுகிழ வோனே!

தன் பகைவரைப் போரிலே வெல்லுதலும் அல்லாமல் நாட்டை வருத்தும் பசியாகிய பகையையும் ஒட்ட வல்லவன் அவன். மறவர் மலிந்தது அவன் படை கடலிலிருந்து வரும் வங்கம், ஆறுகளின் வழியாகச் சென்று, துறைதோறும் நின்று நின்று வாணிகம் பெருக்கிச் செல்லும் நல்லூர்கள் பல நிறைந்தன அவன் நாடு. இனிதாகத் தங்கியிருப்பதற்கு ஏற்ற பல புதுப்புது வருவாய்களையும் உடையது அது. அவனைக் கண்டு, பரிசில் பெறும் அவாவினால், ஒருநாள் இரவின் கடையாமத்திலே அவன் அரண்மனையின் முற்றத்தில் நின்று, தடாரிப்பறையை இசைத்துப் பாடினேன். அந்த நேரத்தில் பலரும் உறங்கிக் கொண்டிருக்கவும், அவன் மட்டும் உறங்காதிருந்தான். என்கிணைக் குரலின் ஒலியைக் கேட்ட அவன் விரைந்து வந்தான். என் பீற்றல் உடையைப் போக்கிப் புதிய நல்லாடை அணிவித்தான். விலைமதிக்க இயலாத ஆபரணங்களையும் எனக்கு அளித்தான். உணவும், பன்னாடை யால் அரிக்கப்பட்ட நறவும், அதன்பின் நாள்தோறும் உண்டு மகிழ்ந்தேன். நாள் போவதும் உணராதே அவன் ஊரிலேயே நெடுநாள் தங்கி விட்டேன். என்னே அவன் வள்ளன்மை! வாழ்க அவன்!

புறநானூறு மூலமும் உரையும் முற்றிற்று.