பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

புறநானூறு - மூலமும் உரையும்



புறநானூற்றுச் செய்யுட்களுள் காணப்பெறுகின்ற சில அரிய உவமைகள்

அரசனுக்கு உயிர் அருவிக்குத்துகில் அருளுக்கு நீர் அழகிய இடத்திற்கு ஒவனம் அழித்தற்குத் தீ, உபகாரியாகிய ஒருவனுக்கு அருஞ்சுரத் தினிடையே விளங்கும் மரம், உசாவினது அகலத்திற்குப் பரந்த ஆகாயம்; எருமைக்குக் குண்டுக்கல், எருமைக் கொம்பிற்குப் பயற்று நெற்று;

கந்தைத் துணிக்குப் பாசியின் வேர், கள்ளின் மயக்கிற்குத் தேளின் கடுப்பு: கலிங்க உடைக்குப்பாம்புத் தோல், கிணைப் பறைக்குக் களிற்றின் அடி குடுமிக்கு மானின் உளை, குதிரையின் விரைவுக்குக் காற்றின் வேகம், சாயலுக்கு நீர், செந்நெல்லுக்கு

வேங்கைப்பூ சேனைக்குக் கடல்;

தடாரிப் பறைக்குத் திங்களும் யானைக் காற்சுவடும்; தமிழ் நாட்டு அரசர் மூவர்க்கு முத்தி தலைவனின் போர் வெம்மைக்குக் காயும் கதிரவனும்; அருளும் தண்மைக்குச் குளிர் திங்களும்; நரைத்த கூந்தலுக்குக் கொக்கின் துவி; -

நிணத்திற்கு நெய்விழுதும் மெழுகு அடையும்; பகைப் படையைத் தான் ஒருவனேயாக நின்று தடுத்து நிறுத்தற்குக் கடலின் கரை; பாசறைக்கு கடல்; புகழுக்கு நிலவு பொறுமைக்கு நிலம்; மகளிர்நடைக்கு மயிலின் நடை முத்தாரத்திற்குப்பிறையின் வடிவம்; யானைச் செவிக்கு முறம், வண்மைக்கு மாரி, வலிமைக்குக் காற்று; வறுமைத் துயருக்கு நரகத் துயர் வேலுக்குக் கெண்டை

இன்னும் இவைபோல் மிகப் பலவாம்.