பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

403


காட்டுகின்றார் இவர். 'இடைக் குன்று’ என்னும் ஊரினர் இவர்; இவ்வூர் பாண்டி நாட்டது. - இரும்பிடர்த் தலையார் 3

இவர் பாடியதாகக் கிடைத்தது இச் செய்யுள் ஒன்று மட்டுமே யாகும். இவரைக் கரிகால் வளவனின் அம்மான் என்பர். இருப்பினும், இவர் பாடியது பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை ஆகும். இதனால், இவரைப் பாண்டிய மரபினர் எனவும், சோழர் குடியோடு மகட்கொடை உடையவர் எனவும் கருதலாம். பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து' என்னும் உவமைநயத்தால் இவர் இப் பெயர் பெற்றனர் என்பர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. இச் செய்யுளால், இவர் உரைக்கும் உறுதிப் பொருள்கள் மிக்க செப்பம் உடையன ஆகும். அவற்றைப் பேணியவர் இவர் என்பதும், இவரால் வளர்க்கப்பெற்ற கரிகாலன் புகழ் பெற்றமைக்கு அதுவே காரணம் என்பதும் விளங்கும்.

உலோச்சனார் 258, 274, 377

இவர் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவர், நெய்தல் திணைச் செய்யுட்களை மிகுதியாகப் பாடியவர். 'அழிசூழ் படப்பைக் காண்டவாயில். எம் அழுங்கல் ஊரே என்னும் இவர் வாக்கால் (நற்.38) இவர் காண்டவாயில் என்னும் ஊரினர் எனலாம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியவர். இவராற் பாடப் பெற்றனவாகத் தொகை நூற்களுள் காணப்படுவன மொத்தம் 35 செய்யுட்கள். அவை அனைத்தும் நெய்தலின் செழுமையை நமக்குக் காட்டும் சொல்லோவியங்கள் ஆம் நீலக் கச்சைப் பூவார் ஆடைப், பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்' (புறம் 274) என, அக்கால மறவனது உருவத்தையே நம் கண்முன் நிறுத்துகின்றார் இவர். உறையூர் இளம்பொன் வாணிகனார் 264

உறையூர்க்கண் பொன்வாளிகஞ் செய்து வந்தவர் இவர்.

இளமை, பருவத்தைக் குறித்தது. மற மாண்பினான ஒருவனது சிறப்பை இவர் செறிவோடு நமக்கு எடுத்துக் கூறுகின்றார். உறையூர்: ஏணிச்சேரி முடமோசியார் 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375

உறையூர் ஏணிச்சேரி என்னும் பகுதியைச் சார்ந்த பெரும்புலவர் இவர் சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை, சோழன், முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி, வேள் ஆய் அண்டிரன் ஆகியோரைப் பாடியவர் 'திருந்து மொழி மோசி