பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

புறநானூறு - மூலமும் உரையும்



எருமை வெளியனார் 273, 303

‘எருமை மரம் என்பது, முதுகிட்ட தன் சேனைக்குப் பின் பகைவர் சேனையை அஞ்சானாய் நின்று சினத்துடன் போராற்றித் தடுத்து நிறுத்தும் ஓர் மறவனின் செயலைப் புகழ்ந்து கூறுதல். அதனில் வல்லவராயினமை பற்றி இப் பெயர் பெற்றனர் போலும்! குதிரைமறத் துறையைச் சார்ந்த இவ்விரு செய்யுட்களிலும், அத்தகைய மாவீரனின் வீரத்தையே இவர் பாடுகின்றார். இவருடைய அகநானூற்றுச் செய்யுளும் (73) மிக்க கருத்துச் செறிவு உடையதாகும். மின்னலுக்குப் புனங்காப்போனின் கையிடத்திலுள்ள கனல்வாய்க் கொள்ளியின் விடுபொறியை உவமித்துள்ளனர் இவர் (அகம்,73). ஆகவே, மலைப் பகுதியைச் சார்ந்தவர் இவர் எனலாம்.

ஐயாதிச் சிறுவெண் டேரையார் 363

சிறுவெண் டேரையார் என்பாரினும் வேறுபடுத்த இவருக்கு 'ஐயாதி என்னும் அடையினைத் தந்தனர் போலும். தவநெறி பூண்டு நெடுநாள் யோகத்தே இருந்தமை காரணமாகத் "தேரையார்’ என்று பெயர் பெற்றனரும் ஆகலாம். யாக்கையது நிலையாமையை உணர்த்தி, வேந்தன் ஒருவனை அறநெறிக்கண் செலுத்தக் கருதிக் கூறிய 'அறிவுரைகளாக இச் செய்யுள் அமைந்துள்ளது. 'உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே என்கிறார் இவர். இது, இவர் துறவுநெறி நின்றவர் என்பதனை வலியுறுத்தும். - ஐயூர் முடவனார் 51, 228, 314, 339

ஐயூரினரான இவர் வேளாண் மரபினர். இவர் முடவனார் என்பது, தாமான் தோன்றிக் கோனைச் சென்றடைந்து வண்டியிழுத்தற்குப் பகடுவேண்டிப் பாடிய செய்யுளாற் புலனாகும் (399). ஆதன் எழினியும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் இவராற் பாடப்பெற்றோர் ஆவர். கோசரின் செல்லூரது வளத்தை இவர் அருமையாகப் பாடியுள்ளனர் (அகம்216). இவருடைய பிற செய்யுட்கள், அகம் 216; குறுந்தொகை 123, 206, 322, நற்றிணை 206, 344 என்பன. அனைத்தும் சிறந்த இலக்கியச்சுவை உடையன ஆகும். வழுதியின் ஆற்றலைக் கூறுவாராக, “நீர் மிகின் சிறையும் இல்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி” என்று, நுட்பமான கருத்தமைதியுடன் உரைக்கின்றார். போர் எதிர்த்து வந்த பகைவரை எள்ளுவாராக, செம்புற் றியல் போல, ஒரு பகல்