பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

407


வாழ்க்கைக்கு உலமருவோர் என்கின்றார்.நெடுமாவளவன் இறந்த ஞான்று, தாழி வனையும் வேட்கோவிடம் கூறுவதுபோல அமைந்த செய்யுள், இவருடைய பெரும் புலமைக்குச் சான்றாகும்.

ஐயூர் மூலங்கிழார் 21

இவரும் ஐயூர் வேளாண் மரபினரே யாவர். மூலவோரையில் பிறந்தவர் போலும்! வேங்கைமார்பனை வென்று சிறப்புற்ற, கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை இவர் போற்றிப் பாடியுள்ளனர். இவர் ஒளவையார் போன்ற பெரும்புலவர் காலத்தவர்; அவர்களையொத்த சான்றாண்மையும் புலமை நலமும் உடையவரும் ஆவர். - -

ஒக்கூர் மாசாத்தனார் 248

புதுக்கோட்டைச் சீமையைச் சார்ந்த ஒக்கூரினர் இவர். மாசாத்தனார் என்பது, இவரை வணிகர் குடியினர் எனக் காட்டும். இச் செய்யுள் கைம்மை நோன்பு பூண்டு ஒழுகும் மகளிரது வழக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவருடைய அகநானூற்றுச் செய்யுள் பாலைநிலத்தின் தன்மையை நன்கு காட்டுவதாகும். மனையோளிள் ஏக்கத்தையும், அது தீரவந்த தலைவனின் தேரையும் பற்றிப் பாணன் தன் தோழர்க்குக் கூறுவதாக அமைந்துள்ளது அச் செய்யுள் (அகம்.14).

ஒக்கூர் மாசாத்தியார் 279

இவர் பெண்பாலர்.அகம்,324,384:குறுந் 126,139,186,220,275 ஆகிய செய்யுட்களையும் செய்தவர். மறக்குடித்தாய் ஒருத்தியின் நாட்டுப்பற்றைக் காட்டும் சித்திரமாக அமைந்துள்ளது இச் செய்யுள். பழந்தமிழ் நாட்டுப் பெண்களும் எத்துணை நாட்டுப் பற்று உடையவராக விளங்கினர் என்பதனைக் காணற்கு இச் செய்யுளைப் பன்முறை கற்கவும், நாட்டுப்பற்றை வலியுறுத்த இதனை நாடெல்லாம் பரப்பவும் வேண்டும்.

ஒருசிறைப் பெரியனர்ர் 127 ~

இவர் நாஞ்சில் வள்ளுவனையும், அவன் நாட்டு மலைவளத்தையும் விளக்கிப்பாடுகின்றனர். குறுந்தொகையின் 272 ஆம் செய்யுளும், நற்றிணையின் 121 ஆம் செய்யுளும் இவர் பாடியனவாக விளங்குவன. குறக்குலக் கன்னியது கடை சிவந்த கண்ணுக்கு, அவள் அண்ணன்மார் கலைமானை அம் பெய்து கொன்று, குருதியோடு பறித்த செங்கோல் வாளியின் மாறுகொண்ட நிலையை உவமிக்கின்றனர் (குறு. 272). கலிமா, வண்பரி தயங்க எழிஇத் தண்பெயற் கான்யாற்றிடுமணற் கரையிறக் கொழிய, எல்விருந் தயரும், மனைவி மெல்இறைப் பணைத்தோள்