பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

409


சிறக்க, பசியில்லாகு'அறம்நன் சிறக்க, அல்லது கெடுக அரசு முறை செய்க, களவு இல்லாகுக’, என வருவன காண்க. வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்கு உரைத்த பத்து, புலவிப் பத்து, தோழிக்கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப்பத்து, புனலாட்டுப் பத்து என வரும் ஒவ்வொன்றுமே சொற்சுவை பொருட்சுவை மலிந்தன ஆகும். இயற்கையை நுட்பமாகக் கண்டு சுவையோடு செய்யுட்களில் அமைத்துச் செழுந்தமிழ் வளத்தைப் பெருக்கியவர் இவர். வெற்றிகொண்ட மாவீரனின் செயலாக இவர் அமைத் துள்ள இச்செய்யுள், மறக்குடி மகனின் மனச் செருக்கை நன்றாகக் காட்டுவதாகும் (புறம் 284).

ஓரேருழவர் 193

ஒர் ஏர் உழவனை உவமை கூறிய சிறப்பால் இப் பெயர் பெற்றனர். இல்லறத்தை வெறுத்துக் கூறுதலால், இவரைத் துறவு பூண்டவர் எனக் கருதலாம். ஒளவையார் 87 - 104, 140,187, 206, 231,232, 225, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392

இவர் பாணர் மரபினர். அதியமான் நெடுமான் அஞ்சியோடு நட்புப் பூண்டு, பலகாலம் அவன் அவையில் வாழ்ந்திருந்து, அவனையும் பிறரையும் பாடியவர். அக் காலத்துப் புலவர்களிடையேயும் அரசர்களிடையேயும் பெருமதிப்புப் பெற்றுத் திகழ்ந்தவர். இவருடைய செய்யுட்கள் எளிமை, செறிவு, பொருள் நுணுக்கம், உள்ளப் பிணிப்பு ஆகியவற்றாற் சிறந்தன. அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பலரையும் பாடியவர். பெண்பாலராயினும், தெய்வப் புலவர் என்னும் கீர்த்தியோடு வாழ்ந்தவர். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் தொகை நூற்களிலும் இவரது செய்யுட்கள் காணப்படும். இவர் வரலாறும், செய்யுட்களும் தனியாக ஆய்ந்து இன்புற வேண்டியனவாகும்.

கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி 182

இவர் பாண்டியர் குடியினர். 15 ஆவது பரிபாடற் செய்யுள்களையும், இச் செய்யுளையும் செய்தவர். பரிபாடற் செய்யுள் திருமாலைக் குறித்தது ஆகும். இளமை பருவத்தையும், பெருமை புலமைச் சால்பையும் குறிக்கத் தரப்பட்டனவாகலாம்; ‘கடலுண் மாய்ந்த என்பது, இவர் கடற்செலவிற் சென்றபோது ஏற்பட்ட துயரச் செயலின் நினைவாக இவருக்குப் பின்னாளில்