பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

புறநானூறு - மூலமும் உரையும்


குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிய செய்தியை இவர் கூறுகின்றார் (அகம்.145). இவர் செய்யுட்களுட் பலவும் பாலைத்திணை பற்றியனவாகவும், பொருட்செறிவுடனும் விளங்குகின்றன. கருங்குழலாதனார் 7, 224

சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடியவர் இவர். ஆதனார் இவர் பெயர் கருங்குழல் என்பது குழலின் கருமை பற்றி அமைந்ததாகலாம். 'கருமை என்பது பருவமுதிர்ச்சிக் கண்ணும் நரை கொள்ளாதிருந்த சிறப்பு. வளவனின் போர் மறத்தையும், அவன் இறந்த ஞான்று அவன் மகளிர் கொண்ட துயர மிகுதியையும் பாடியுள்ளனர். 'கோவலர் பூவுடன் உதிரக் கொய்து கட்டழித்த வேங்கையின் மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே என்று கூறுவது, மிக்க துயரம் தருவதாகும். கருவூர்க் கதப்பிள்ளை 380

இவர் பெயர் கதப்பிள்ளையார் எனவும் வழங்கும். இவர் கருவூர்ப் புலவர்கள் பலருள் ஒருவர். குறுந்தொகையின் 64, 265,380, 135 ஆம் செய்யுட்களும், இச் செய்யுளும் இவர் செய்தனவாக வழங்கும். நாஞ்சில் வள்ளுவனாகிய தென்னவன் வயமறவனின் சிறப்பை மிக்க நயமுடன் பாடியுள்ளார். துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன், நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் என்று அவனைக் குறிப்பிடுகிறார். இவருடைய குறுந்தொகைச் செய்யுட்களும் மிக்க சுவை யுடையனவாகும் காந்தள் முகையை வண்டு வாய்திறக்க, அது இதழவிழ்ந்ததாய், அவ் வண்டுக்கு இடம்விட்டு அமைகின்றது. இதனைத் தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட, கடனறி மாக்கள் போல இடன்விட்டு இதழ் தளையவிழ்ந்து' என்று கூறியவர் இவர். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் 168

கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் எனவும் இவர் பெயர் காணப்படும். கதப்பிள்ளையின் புதல்வர் இவர் எனலாம். சாத்தனார் இவரது பெயர். அகநானூற்று 309 ஆம் செய்யுளையும், நற்றிணை 343 ஆம் செய்யுளையும் பாடியவர் இவர். இவராற் பாடப்பெற்றவன் 'பிட்டங் கொற்றன் என்பான் ஆவன். பிட்டங் கொற்றன் குதிரை மலைக்கு உரியவன் என்பதும், வள்ளன்மையும் மறமாண்பும் உடையவன் என்பதும் இவர் செய்யுளாற் புலனாகின்றன. வையக வரைப்பிற் றமிழகம் கேட்ப எனத், 'தமிழகம் என்னும் பொதுச்சொல் தமிழ் கூறும் நிலப்பகுதி கட்கு இவரால் தரப்பெற்றிருப்பதனை இச் செய்யுளாற் காணலாம். 'நெடுவீழ்’ இட்ட கடவுள் ஆலத்து மக்கள் தெய்வங்கட்கு