பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

415


காக்கை பாடினியார் நச்செள்ளையார் 278

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப் பத்துள் ஆறாம் பத்திற் பாடி, ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் பெற்ற சிறப்பினர் இவர். பெயரமைதி கொண்டு இவரைப் பெண்பாலர் எனக் கொள்வர். ‘விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே (குறு210) எனத் தம் கொழுநர் வரவை முற்பட அறிவித்த காக்கைக்கு மகளிர் பலியிட்டுப் போற்றும் செய்தியை நயம்படக் கூறினமையின் இவ் அடை மொழி பெற்றனர் என்பர். தன் மகன் படையழிந்து மாறினன் எனக் கேட்டுச் சினந்து எழுந்தாளான ஒரு மறக்குல மூதாட்டி களஞ் சென்று, அவனுடல் களத்திலே சிதைந்து வேறாகிக் கிடந்த தன்மையைக் கண்டதும், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதாக உவப் படைந்தனளாம். அத் தாயின் நாட்டுப் பற்றை இச் செய்யுளில் (புறம் 278) மிகவும் செறிவோடு அமைத்துக் காட்டியுள்ளார் இவர்.

காரி கிழார் 6

இவர் வேளாண் குடியைச் சேர்ந்தவர். இவராற் பாடப் பெற்றோன் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் ஆவன். பாண்டியனுக்குச் சிறந்த உறுதி பொருள்களைக் கூறுவதுடன், அவனுடைய வென்றி மேம்பாட்டையும் சிறப்பித்து இச் செய்யுளிற் பாடியுள்ளனர். காரி என்பது ஒர் ஊர் போலும் அவ்வூரினர் இவர் எனலாம். 'வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய, தண்டா ஈகைத் தகைமாண் குடுமி என்னும் சொற்கள், அந் நாளிற் பாண்டிய மண்டலத்தின் சீரும் சிறப்பும் விளங்கிய மேதகு நிலையைக் காட்டுவனவாகும். பணியியரத்தை நின் குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே’ என்றதனால் இவர் சிவநெறியாளர் என்பதும், அந் நாளிலும் சிவபிரான் உருவை ஊர்வலமாகக் கொண்டு சென்று போற்றும் விழாக்கோள் நிகழ்ந்த தென்பதும் அறியப்படும். -

காவட்டனார் 359

இச் செய்யுளையும், அகநானூற்று 378 ஆம் செய்யுளையும் பாடியுள்ளவர் இவர். இவராற் பாடப்பெற்றோன் அந்துவன் கீரன் என்போன் ஆவன். வாடைக் காற்றை வடந்தை' என்பவர் இவர் 'வசையும் நிற்கும்; இசையும் நிற்கும் அதனால், வசைநீக்கி இசை வேண்டியும் நசை வேண்டாது நன்று மொழிந்தும்; இரவலர்க்கு வழங்கியும் நீ வாழ்ந்தால் இவ்வுலகத்தே நின் புகழ் நெடிது விளங்கும் என்கின்றார் இவர் (புறம் 359).