பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

புறநானூறு - மூலமும் உரையும்



காவற்பெண்டு 86

சோழன் போர்வைக் கோட்பெருநற் கிள்ளியின் செவிலித் தாயாராக விளங்கி, அறிவாற்றலும் புலமைச் செறிவும் கொண்டிருந்தவர் இவர் ஆவர். இச் செய்யுள், மறக்குடித் தாய்மார், அக் காலத்தே கொண்டிருந்த உள்ளத் திண்மையையும், நாட்டுப் பற்றையும் எடுத்துக் காட்டுவதாகும். புவி சேர்ந்து போகிய கல்லளை போல, ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே என்னும் வாக்கு, வீரத் தாய்மாரின் உள்ளச் சீர்மைக்கு விளக்கம் ஆகும். காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 57, 58, 169, 171, 353

அகம். 107, 123, 285, குறுந் 297, நற். 237 என்னுஞ் செய்யுட்களையும், இவ்வைந்து செய்யுட்களையும் பாடியவர் இவர். 'கல்லா நீண்மொழிக் கதநாய் வன்னியர்’ என, இவர் அக்காலத்து வடுகரின் வாழ்க்கை நிலையைக் கூறுவர். உண்ணாமையால் வாட்ட முற்று ஆடியசைந்து செல்லும் யானையை, 'உண்ணாமை யின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, வரைசெறி சிறுநெறி நிரையுடன் 'செல்லும் கான யானை' என மிகவும் சுவையோடு கூறுவர் இவர். புகாரின் சிறப்பை விளக்குவார் போல பொருளின்பாலும் காதலியின்பாலும் மாறி மாறிச் செல்லும் மனவியல்புடையை ஒருவனைப் பற்றிக் கூறுமிடத்து, இரவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஒதம் போல ஒன்றிற் கொள்ளாய் சென்று தரு பொருட்கே எனக் கனிவோடு கூறுவர். வானத்தே எழுந்த மேகத்திரளைக் குறிப்பாருக்கு வள்ளல் ஆய் அண்டிரனின் யானைக் கொடைச் செறிவு நினைவில் எழுகின்றது. அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப ஏர்தரும் வேறுபல் உருவின் மழையே (நற்றிணை 237), என்கின்றார். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப்பாடிய இச் செய்யுள் சந்து செய்யும் நுட்பமான அறிவாற்றலுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதாகும்.

ஒன்றுபட்டு ஒருங்கிருந்தாரான சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும், பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் கண்டு பாராட்டிப் பாடிய செய்யுள் (58) மிக்க கருத்துச் செறிவு கொண்டது ஆகும். பாண்டியனின் சிறப்பை மிகவும் செப்பமாக இவர் எடுத்துக் கூறுகின்றார். இவனே நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, வரைய சாந்தமும், திரைய முத்தமும், இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழுகூடல் தண்கோல் வேந்தே'